தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7324

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

7324. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு “அடடா! அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன்.

அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேலிட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 96


حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ

كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ مِنْ كَتَّانٍ، فَتَمَخَّطَ، فَقَالَ: «بَخْ بَخْ، أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الكَتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى حُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَيَّ، فَيَجِيءُ الجَائِي فَيَضَعْ رِجْلَهُ عَلَى عُنُقِي، وَيُرَى أَنِّي مَجْنُونٌ، وَمَا بِي مِنْ جُنُونٍ مَا بِي إِلَّا الجُوعُ»


Bukhari-Tamil-7324.
Bukhari-TamilMisc-7324.
Bukhari-Shamila-7324.
Bukhari-Alamiah-6779.
Bukhari-JawamiulKalim-6806.

புகாரீ இமாம்

محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي البخاري

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முகீரா பின் பர்திஸ்பா

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வம்சம்: அல்ஜுஃஃபீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: புகாரா

பயணித்த ஊர்கள்: புகாரா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, பஃக், ஸமர்கந்த்

பிறப்பு: ஹிஜ்ரி 194, புகாரா

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

கால கட்டம்: பிந்தைய காலத்தவர்


வாழ்க்கைக் குறிப்பு

புகாரீ இமாம் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். ஹதீஸ் கலையில் உலக இமாமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதற்காக முஸ்லிம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்கள். அவர்கள் தொகுத்த ஸஹீஹ் புகாரீ, குர்ஆனுக்குப் பிறகு மிகவும் நம்பகமான ஹதீஸ் நூலாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு ஸமர்கந்தில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபைதுல்லாஹ் பின் மூஸா பின் அபில்முக்தார், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அன்னபீல், மக்கீ பின் இப்ராஹீம் பின் பஷாயர், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, ஸயீத் பின் அபீ மர்யம், அஃப்பான் பின் முஸ்லிம், மாலிக் இமாம், குதைபா பின் ஸயீத் பின் ஜமீல், உஸ்மான் பின் முஹம்மத் (அபூ ஷைபா)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹரவீ, முஹம்மத் பின் அஹ்மத் பின் தூலாப், மன்சூர் பின் முஹம்மத் பஸ்தூரீ

வேறு பெயர்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல், இமாம் புகாரீ


ஆதாரம்: muslimscholars.info (30001) · Should verify

ஸுலைமான் பின் ஹர்ப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹம்மாத் பின் ஸைத்

حماد بن زيد بن درهم الأزدي – أبو إسماعيل

இறப்பு: ஹி-179.

தரம்: மிகப் பலமானவர்; பிரபலமான முக்கிய மார்க்க அறிஞர்; ஹதீஸை அறிவிப்பதில் பேணுதல் உள்ளவர்.


இயற்பெயர்: ஹம்மாத்

தந்தை பெயர்: ஸைத்

வமிசம்: அல்அஸ்தீ, ...

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஇஸ்மாயீ, அல்அஸ்ரக், அள்ளரீர், ...

ஊர் பெயர்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி-98.

இறப்பு: ஹிஜ்ரி-177 அல்லது 179

கால கட்டம்: 8.


ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத் இருவரும் ஹதீஸ்துறையின் முக்கிய அறிஞர்கள் ஆவார்கள்.

1 . அஃப்பான் பின் முஸ்லிம் அவர்கள் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும்போது, ஹம்மாத் பின் ஸைத் என்று முழுமையாக கூறுவார். ஹம்மாத் பின் ஸலமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஹம்மாத் என்று மட்டுமே கூறுவார். இதை மிஸ்ஸீ அவர்கள் தனது "தஹ்தீபுல் கமால்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

2 . அஹ்மத் பின் அப்தா, அபுர்ரபீஃ, குதைபா பின் ஸயீத், முஸத்தத் ஆகியோர் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் ஹம்மாத் என்று தனது ஆசிரியரைக் கூறினால் அவர் ஹம்மாத் பின் ஸைத் ஆவார்.

3 . பஹ்ஸ் பின் அஸத், மூஸா பின் இஸ்மாயீல் ஆகியோர் ஹம்மாத் பின் ஸலமா அவர்களிடமிருந்து மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் ஹம்மாத் என்று தனது ஆசிரியரைக் கூறினால் அவர் ஹம்மாத் பின் ஸலமா ஆவார்.

4 . புகாரி அவர்கள் தனது ஸஹீஹ் புகாரியில் "ஹம்மாத்" என்று மட்டும் குறிப்பிட்டால், அது ஹம்மாத் பின் ஸைத் அவர்களையே குறிக்கும். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இமாம் புகாரி அவர்கள் ஹம்மாத் பின் ஸலமா என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

5 . நஸாயீ அவர்களின் ஸுனன் நஸாயி எனும் நூலில் அறிவிப்பாளர்களில் ஒருவர் "ஹம்மாத்" என்று அறிவித்தால், அது பொதுவாக ஹம்மாத் பின் ஸைத் அவர்களையே குறிக்கும்.

6 . ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து 2 ஹதீஸ்களை மட்டுமே அறிவித்துள்ளார். அதல்லாத செய்திகளில் ஹம்மாத் என்று கூறினால் அது ஹம்மாத் பின் ஸலமா ஆவார்.

7 . மேற்கண்ட முறைகள் மூலம் வேறுபடுத்த இயலாவிட்டால் அறிவிப்பாளர்தொடரில் வேறு குறைகள் இல்லையென்றால், அந்த ஹதீஸை முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ளதாகக் கருதலாம். ஏனெனில், இமாம் முஸ்லிம் அவர்கள்  ஹம்மாத் பின் ஸைத், ஹம்மாத் பின் ஸலமா ஆகியோரை ஆதாரமாக ஏற்றுள்ளார். இந்த தகவலை தஹபீ அவர்கள் தனது "ஸியரு அஃலாமின் நுபலா" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


قلت: وقال يعقوب بن شيبة: ‌حماد ‌بن ‌زيد ‌أثبت ‌من ‌ابن ‌سلمة، ‌وكل ‌ثقة، غير أن ابن زيد معروف بأنه يقصر في الأسانيد، ويوقف المرفوع، كثير الشك بتوقيه، وكان جليلا لم يكن له كتاب يرجع إليه، فكان أحيانا يذكر فيرفع الحديث وأحيانا يهاب الحديث ولا يرفعه، وكان يعد من المتثبتين في أيوب خاصة


وقال يعقوب بن شيبة في "مسنده": ‌حَمَّاد ‌بن ‌زيد ‌أثبت ‌من ‌ابن ‌سلمة، ‌وكل ‌ثقة، غير أن ابن زيد معروف بأنه يقصر في الأسانيد، ويوقف المرفوع كثير الشك بتوقيه، وكان جليلا، ولم يكن له كتاب يرجع إليه، فكان أحيانًا يذكر فيرفع الحديث، وأحيانًا يهاب الحديث ولا يرفعه.


وقال يعقوب بن شَيْبة : «‌حمَّادُ ‌بنُ ‌زَيْد ‌أثبَتُ ‌من ‌ابن ‌سلمة، ‌وكُلٌّ ‌ثقةٌ، غيرَ أنَّ ابنَ زيد معروفٌ بأنه يقصِّر في الأسانيد، ويُوقِفُ المرفوعَ، وكثيرُ الشكِّ بتوقِّيه، وكان جليلاً لم يكنْ له كتابٌ يَرْجعُ إليه، فكان أحيانًا يذكُرُ فيرفَعُ الحديثَ، وأحيانًا يهابُ الحديثَ ولا يَرْفعه»

ஹம்மாத் பின் ஸைத் அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா அவர்களை விட மிகப் பலமானவர். இருவரும் பலமானவர்களே.

1 . சில நேரம் அறிவிப்பாளர்தொடரை சுருக்கி அறிவிப்பார். நபி (ஸல்) அவர்களின் சொல்லாக கருதப்படும் ஒரு செய்தியை நபித்தோழரின் சொல்லாக அறிவிப்பார்.

1 . அவர் ஹதீஸை அறிவிப்பதில் அதிகக் கவனத்துடன் நடந்துள்ள வேண்டும் என்பதால் அதிகம் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவராக இருந்தார்.

2 . அவர் ஹதீஸ்களை மனனத்தில் தான் பாதுகாத்து வைத்திருந்தார். மீண்டும் ஹதீஸை எடுத்துப் பார்க்க அவரிடம் எந்த நூலும் இருக்கவில்லை. அதாவது அவர் ஹதீஸ்களை எழுதி வைக்கவில்லை. (யஹ்யா பின் ஸயீத் அவர்களின் ஒரு சிறு நூல் மட்டும் அவர்களிடம் இருந்தது)

எனவே, சில சமயங்களில் அவர் (நினைவிலிருந்து) குறிப்பிடும்போது, ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிப்பார்.

வேறு சில சமயங்களில், அந்தச் செய்தியைக் குறிப்பிடுவதில் தயக்கம் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்க மாட்டார். மாறாக நபித்தோழரின் சொல்லாக அறிவிப்பார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-1/481, அல்இக்மால்-2/436, அல்இலல்-இப்னு அபூஹாதிம்-ஆய்வாளரின் முன்னுரை-1/77)

பிற்காலத்தில் ஹம்மாத் பின் ஸைத் அவர்களுக்கு பார்வை குறைப்பாடு ஏற்பட்டது. எனவே இவர் ஒரு செய்தியை நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் கருத்து வேறுபாட்டுடன் அறிவித்தால் இவரிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் எப்படி அறிவித்தார்கள் என்று பார்க்க வேண்டும்.

அய்யூப் பின் கைஸான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஹம்மத் பின் ஸீரீன்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.