அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:
வேதக்காரர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! (மறுமையில்) அல்லாஹ் வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மரத்தையும் ஈர மண்ணையும் ஒரு விரலின் மீதும், (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு, ‘நானே அரசன்; நானே அரசன்’ எனக் கூறுவான்’ என்றார்.
(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, ‘அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்கவேண்டுமோ அப்படி மதிக்கவில்லை’ எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.52
Book :97
(புகாரி: 7415)حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ عَلْقَمَةَ يَقُولُ: قَالَ عَبْدُ اللَّهِ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ الكِتَابِ فَقَالَ: يَا أَبَا القَاسِمِ، إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ، وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ، وَالخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ: أَنَا المَلِكُ أَنَا المَلِكُ، «فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ»، ثُمَّ قَرَأَ: {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ} [الأنعام: 91]
சமீப விமர்சனங்கள்