தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7425

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்றுதிரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். ஆகவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அப்போது ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை அன்சாரியான அபூகுஸைமா (ரலி) அவர்களிடம் கிடைக்கப்பெற்றேன். அவரல்லாத வேறொருவரிடமும் அதை நான் காணவில்லை.

அந்த இறுதிப் பகுதி, “உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்” என்பதிலிருந்து அல்பராஅத் அத்தியாயத்தின் இறுதி(யான ‘அவனே மகத்தான அரியணையின் அதிபதி ஆவான்’ என்பது)வரை உள்ளதாகும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.63
அத்தியாயம் : 97

(புகாரி: 7425)

حَدَّثَنَا مُوسَى، عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ قَالَ:

«أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ فَتَتَبَّعْتُ القُرْآنَ، حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرِهِ»، {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} [التوبة: 128] حَتَّى خَاتِمَةِ بَرَاءَةَ. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ بِهَذَا، وَقَالَ: مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ


Bukhari-Tamil-7425.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-7425.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




10 comments on Bukhari-7425

  1. அஸ்ஸலாமு அலைக்கும்….
    புஹாரி 7425 அரபி மூலத்தில் அபி ஹுஸைமா அன்சாரி பெயர் இடம் பெற்று உள்ளது. தமிழ் மொழி பெயர்பில் அன்சாரி என்று மட்டும் உள்ளது. சரிபார்க்கவும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டுள்ளது.

  2. அபூகுஸைமா (ரலி) பொய்சாட்சி சொன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி ஹதீஸை மறுக்கிறது அதை நீங்கள் பலமான செய்தி என்று போட்டுள்ளீர்கள்.?

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      அபூகுஸைமா (ரலி) பொய்சாட்சி சொன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவில்லை. அபூகுஸைமா (ரலி) அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள் என்று தான் கூறுகிறார்கள். எனவே தங்களின் விமர்சனம் சரியானதல்ல. இதைப் பற்றிய தவ்ஹீத் ஜமாத்தின் கருத்து .

      1. நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில்

        //நபியவர்களுக்காக கண்ணால் காணாத ஒன்றைக் கண்டதாக குஸைமா (ரலி) சாட்சி கூறினார் என்று வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது, குர்ஆனுக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்வது கூடாது//

        உண்மையில் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்திருந்தால்
        //Bukhari-2807
        ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது//

        என்று ஏன் மாற்றினீர்கள் இதையும் குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவேண்டிய ஹதீஸ் தானே அதுவும்? ஏன் ஆய்வில் உள்ளது என்று போட்டுள்ளீர்கள் ?

        விளக்கம் தரவும்

        1. அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது ஹதீஸ்களை பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எழுத்துப்பிழைகள், தரம் பற்றிய தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை தரப்படும். ஒரு ஹதீஸ் ஆய்விற்கு பல நாட்கள் தேவைப்படும். எனவே, விரிவான ஆய்வுகள், விமர்சனங்கள் பற்றிய செய்திகளுக்கு பிறகு பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ், எந்தக் கேள்வியும் பதில் அளிக்காமல் விடப்படாது. ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் ஒத்துழைப்பு இன்றி எங்களால் இந்த பணியை சரியாக செய்ய முடியாது. ஸலாம்.

        2. தவ்ஹீத் ஜமாத் சொன்னதையே நாங்களும் சொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. அவர்கள் கூறிய கருத்து சரியாக இருந்தால் அதை ஏற்பதில் தயக்கமும் இல்லை. சந்தேகம் ஏற்படும்போது அந்த ஹதீஸை ஆய்வில் வைத்துவிட்டு, நேரம் கிடைக்கும்போது மறுஆய்வு செய்து பதில் அளிப்பது தான் சரியான முறை. இதில் எந்த தவறும் இல்லை.

          1. அல்ஹம்துலில்லாஹ்,
            பொதுவாக ஒரு ஹதீஸில் பலஹீனமான அறிவிப்பாளர் ஒருவர் வரும்போது அந்த பலஹீனமானவரை இந்த நபர் இந்த வகையில் பலஹீனமான அறிவிப்பாளர் என்று முன்சென்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
            ஆனால் இன்று இப்போது ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரண் என்ற முடிவை யார் எடுக்க வேண்டும். அவர்களுக்கான வரைவிலக்கணம் என்ன?
            பிஜேக்கு குரானுக்கு முரண்படும் ஹதீஸ் தவ்ஹீத் ஜமாத்திற்கு முரண்படமாட்டேங்குது. ஆகவே உங்கள் ஹதீஸ் கலை விதியில் இந்த முடிவை யார் எடுப்பது என்று இருக்கிறதா?
            ஆகவே இதை எல்லாம் இரு கட்டுரையாக போடுங்கள் அப்படி போடும் போது இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்கலாம்.
            இன்ஷா அல்லாஹ்

  3. அல்ஹம்துலில்லாஹ்,
    பொதுவாக ஒரு ஹதீஸில் பலஹீனமான அறிவிப்பாளர் ஒருவர் வரும்போது அந்த பலஹீனமானவரை இந்த நபர் இந்த வகையில் பலஹீனமான அறிவிப்பாளர் என்று முன்சென்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
    ஆனால் இன்று இப்போது ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரண் என்ற முடிவை யார் எடுக்க வேண்டும். அவர்களுக்கான வரைவிலக்கணம் என்ன?
    பிஜேக்கு குரானுக்கு முரண்படும் ஹதீஸ் தவ்ஹீத் ஜமாத்திற்கு முரண்படமாட்டேங்குது. ஆகவே உங்கள் ஹதீஸ் கலை விதியில் இந்த முடிவை யார் எடுப்பது என்று இருக்கிறதா?
    ஆகவே இதை எல்லாம் இரு கட்டுரையாக போடுங்கள் அப்படி போடும் போது இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்கலாம்.
    இன்ஷா அல்லாஹ்

    1. கண்டிப்பாக, இது சம்பந்தமான தலைப்பு வாரியான கட்டுரைகளும், ஆய்வுகளும் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தான் சில விதிகளும், முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்று நாங்கள் நம்பினால் மட்டும் போதாது. பிறரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதை மக்கள் முன் வைப்பதே சரியானது. அதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் உரிமை. எனினும், இந்த வேலை எங்கள் மீது உள்ள கடமை. இன்ஷா அல்லாஹ், அதை செய்வோம். பொருளாதார சிரமம், ஆலிம்கள் தட்டுப்பாடு, மறு ஆய்வு, நேர மேலாண்மை போன்ற காரணங்களால் ஏற்படும் தாமதத்தை பொறுத்துக் கொள்ளவும். ஸலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.