தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7522

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒவ்வொரு நாளும் அவன் (-இறைவன்) ஏதேனும் ஒரு பணியில் இருக்கின்றான் எனும் (55:29 ஆவது) இறைவசனம்.

அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்குப் புதிய நினைவூட்டல் வரும்போதெல்லாம் அதை அவர்கள் விளையாட்டாகவேதான் செவியேற்கின்றார்கள். (21:2)

அதன் பின்னர் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (65:1) அதாவது அல்லாஹ் ஒன்றைப் புதிதாக உருவாக்குவதும் படைப்பினங்கள் ஒன்றைப் புதிதாக உண்டாக்குவதும் ஒன்றாகாது. (இரண்டும் வெவ்வேறானவை ஆகும்.) ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் செவியேற்பவனாகவும் பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். (42:11)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத்  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ், தான் நாடுகின்றவற்றைத் தனது கட்டளையால் உருவாக்குகின்றான். அவன் புதிதாகக் கட்டளையிட்டது தான் நீங்கள் தொழுகையில் பேசக் கூடாது என்பதும்.

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதங்களிலேயே அண்மைக் காலத்தில் (புதிதாக) அருளப்பெற்ற இறைவேதம் (குர்ஆன்) உங்களிடம் இருக்க, (முந்தைய) வேதக்காரர்களிடம் அவர்களின் வேதங்கள் தொடர்பாக நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அ(ந்தப் புதிய வேதத்)தை நீங்கள் கலப்படமின்றி தூய்மையான வடிவில் ஓதிக் கொண்டிருக்கிறீர்கள்.

Book : 97

(புகாரி: 7522)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ} [الرحمن: 29] وَ {مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنْ رَبِّهِمْ مُحْدَثٍ} [الأنبياء: 2]، وَقَوْلِهِ تَعَالَى: {لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا} [الطلاق: 1] «وَأَنَّ حَدَثَهُ لاَ يُشْبِهُ حَدَثَ المَخْلُوقِينَ» لِقَوْلِهِ تَعَالَى: {لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ} [الشورى: 11] وَقَالَ ابْنُ مَسْعُودٍ [ص:153]: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ يُحْدِثُ مِنْ أَمْرِهِ مَا يَشَاءُ، وَإِنَّ مِمَّا أَحْدَثَ: أَنْ لاَ تَكَلَّمُوا فِي الصَّلاَةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

«كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الكِتَابِ عَنْ كُتُبِهِمْ، وَعِنْدَكُمْ كِتَابُ اللَّهِ، أَقْرَبُ الكُتُبِ عَهْدًا بِاللَّهِ، تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.