தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7524

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

(நபியே!) இந்த வஹீயை (-வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறைவசனமும், வஹீ அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதமும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறியதாவது: அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னை நினைவு கூரும் போதும், (என்னைப் பற்றிப் பேசி) அவனுடைய உதடுகள் அசையும் போதும் நான் அவனுடனேயே இருக்கிறேன்.

 ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனம் குறித்து விளக்கும்போது ‘நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தினால்) தம் உதடுகளை அசைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

-இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்’ என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியத

அப்போதுதான் அல்லாஹ் ‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவரச அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்’ எனும் (திருக்குர்ஆன் 75:16,17) வசனங்களை அருளினான். மேலும், ‘நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீங்கள் காதுதாழ்த்தி மெளனமாக இருந்து கேளுங்கள். ‘பின்னர் உங்களை ஓதச் செய்வது நம்முடைய பொறுப்பாகும்.’

(இதன் பின்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக் காட்டியதைப் போன்றே ஓதுவார்கள். 164

Book : 97

(புகாரி: 7524)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} [القيامة: 16]

وَفِعْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يُنْزَلُ عَلَيْهِ الوَحْيُ وَقَالَ أَبُو هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قَالَ اللَّهُ تَعَالَى: أَنَا مَعَ عَبْدِي حَيْثُمَا ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ

فِي قَوْلِهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} [القيامة: 16]، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ» – فَقَالَ لِي ابْنُ عَبَّاسٍ: فَأَنَا أُحَرِّكُهُمَا لَكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَرِّكُهُمَا، فَقَالَ سَعِيدٌ: أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا، فَحَرَّكَ شَفَتَيْهِ – فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17]، قَالَ: «جَمْعُهُ فِي صَدْرِكَ ثُمَّ تَقْرَؤُهُ»، {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 18] قَالَ: ” فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ، ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ، قَالَ: فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ اسْتَمَعَ، فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا أَقْرَأَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.