தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7525

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44 மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்). திண்ணமாக, அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறி கின்றான். எவன் படைத்திருக்கின்றானோ அவன் அறிய மாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கறிந்தனாகவும் இருக்கின்றான் எனும் (67:13,14 ஆகிய) இறைவசனங்கள்.

 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ‘(நபியே!) உங்கள் தொழுகையில். நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தி ஓதாதீர்கள். ஏனெனில், அதைக் கேட்கும் இணைவைப்பாளர்கள் குர்ஆனை ஏசுவார்கள். அதற்காக (உடன் தொழுகின்ற) உங்கள் நண்பர்களுக்கே கேட்காத அளவிற்கு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தவும் வேண்டாம். இரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கையாளுங்கள்’ எனக் கட்டளையிட்டான்.

Book : 97

(புகாரி: 7525)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ، إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ، أَلاَ يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الخَبِيرُ} [الملك: 14]

{يَتَخَافَتُونَ} [طه: 103]: «يَتَسَارُّونَ»

حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، عَنْ هُشَيْمٍ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

فِي قَوْلِهِ تَعَالَى: {وَلاَ تَجْهَرْ [ص:154] بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، قَالَ: «نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخْتَفٍ بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ رَفَعَ صَوْتَهُ بِالقُرْآنِ، فَإِذَا سَمِعَهُ المُشْرِكُونَ، سَبُّوا القُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ»، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ} [الإسراء: 110]: أَيْ بِقِرَاءَتِكَ فَيَسْمَعَ المُشْرِكُونَ فَيَسُبُّوا القُرْآنَ: {وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، عَنْ أَصْحَابِكَ فَلاَ تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.