பாடம்: 45
(நரை) முடிக்கு சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.
அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்) அவர்கள் எங்களின் தோழராக இருந்தார். அவரின் தாடிமுடியும், தலைமுடியும் வெண்மையாக இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களிடம் வந்தபோது தாடிமுடிக்கும், தலைமுடிக்கும் சிகப்பு நிற சாயமிட்டுருந்தார். அப்போது மக்கள் இது மிக அழகாக உள்ளதே என்று கூறினர்.
அதற்கு அவர் கூறியதாவது:
எனது தாயாரும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்கள் தனது நுகைலா எனும் அடிமைப் பெண்ணை நேற்றிரவு என்னிடம் அனுப்பி நான் முடிக்கு சாயமிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
மேலும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (இவ்வாறு) சாயமிடுவார்கள் என்றும் எனக்கு அறிவித்தார்கள்.
(முஅத்தா மாலிக்: 2733)45 – مَا جَاءَ فِي صُبْغِ الشَّعَرِ.
حَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَن أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَ، وَكَانَ جَلِيسًا لَهُمْ، وَكَانَ أَبْيَضَ اللِّحْيَةِ وَالرَّأْسِ قَالَ: فَغَدَا عَلَيْهِمْ ذَاتَ يَوْمٍ وَقَدْ حَمَّرَهُمَا، قَالَ: فَقَالَ لَهُ الْقَوْمُ: هَذَا أَحْسَنُ، فَقَالَ: إِنَّ أُمِّي عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَرْسَلَتْ إِلَيَّ الْبَارِحَةَ جَارِيَتَهَا نُخَيْلَةَ، فَأَقْسَمَتْ عَلَيَّ لأَصْبُغَنَّ، وَأَخْبَرَتْنِي أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَانَ يَصْبُغُ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2733.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1707.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . யஹ்யா அல்லைஸீ
2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ
4 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ
5 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான்
6 . அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்)
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-2733, 2734, 2735, 2736, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4269,
சமீப விமர்சனங்கள்