பாடம் : 24
நரைமுடியில் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ சாயமிடுவது விரும்பத் தக்கதாகும். கறுப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா “வெற்றி ஆண்டில்” அல்லது “வெற்றி நாளில்” (நபி (ஸல்) அவர்களிடம்) “வந்தார்கள்”. அல்லது “கொண்டுவரப் பட்டார்கள்”. அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.
Book : 37
(முஸ்லிம்: 4269)24 – بَابٌ فِي صَبْغِ الشَّعْرِ وَتَغْيِيرِ الشَّيْبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ
أُتِيَ بِأَبِي قُحَافَةَ – أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ، أَوْ يَوْمَ الْفَتْحِ – وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ – أَوِ الثَّغَامَةِ – فَأَمَرَ – أَوْ فَأُمِرَ بِهِ – إِلَى نِسَائِهِ، قَالَ: «غَيِّرُوا هَذَا بِشَيْءٍ»
Tamil-4269
Shamila-2102
JawamiulKalim-3931
சமீப விமர்சனங்கள்