அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது; ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6675)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَنْتِفُوا الشَّيْبَ، فَإِنَّهُ مَا مِنْ عَبْدٍ يَشِيبُ فِي الْإِسْلَامِ شَيْبَةً، إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً ، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6675.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6498.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான்
3 . முஹம்மத் பின் அஜ்லான்
4 . அம்ர் பின் ஷுஐப்
5 . ஷுஐப் பின் முஹம்மத்
6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-முஹம்மத் பின் அஜ்லான்-இப்னு அஜ்லான் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டுமே விமர்சனம் உள்ளது.
1. இவர், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்.
2. இவர், ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) கூறியதாக அறிவிக்கும் செய்திகள்.
பார்க்க: இப்னு அஜ்லான்.
அரபியில்: محمد بن عجلان ثقة أم صدوق؟.
- அதில் இந்த அறிவிப்பாளர்தொடர் இல்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் —> (இவரின் தந்தை) ஷுஐப் பின் முஹம்மத் —> (ஷுஐப் அவர்களின் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர் தொடர் பற்றி:
- இந்த அறிவிப்பாளர்தொடரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
போன்றோர் முர்ஸல் என்றும் அல்லது முன்கதிஃ என்றும் விமர்சித்துள்ளனர். இதற்கு காரணம் இவரின் பாட்டனார் முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்பதால் ஆகும். இவர் தாபிஈ ஆவார். (என்றாலும் வேறு சிலர் இதில் கூறப்படும் பாட்டனார் என்பது ஷுஐப் அவர்களின் பாட்டனார் என்றும், 10 க்கும் மேற்பட்ட செய்திகளில் பாட்டனார் என்ற வார்த்தைக்குப் பின்பு அப்துல்லாஹ் பின் அம்ர் என்று தெளிவாக வந்துள்ளது என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.) - இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அறிவிப்பது (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எழுதிவைத்திருந்த) ஒரு ஏட்டிலிருந்து-நூலிலிருந்து என்பதால் இது சரியானதல்ல என்று கூறியுள்ளார். (இது போன்று (விஜாதா எனும் முறையில்) கிடைக்கும் நூலின் செய்திகளை அதற்குரிய நிபந்தனைகளின்படி இருந்தால் ஏற்கலாம்) - இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அல்ஹுமைதீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்றோர் இந்த அறிவிப்பாளர்தொடரை ஆதாரமாக ஏற்றுள்ளதை நான் பார்த்துள்ளேன் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மற்ற பலமான செய்திக்கு இந்த அறிவிப்பாளர்தொடர் முரண்படாதபோது ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரை பற்றிய விமர்சனங்களையும், சிலர் சரியானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறுவர் என்ற விவரங்களையும் கூறிய பின் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியான ஹதீஸ்களில் உயர்ந்த தரம் என்று நாம் கூறவில்லை; இது ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: அல்முஹல்லா-4/38, இலலுத் திர்_மிதீ-108/181, தஹ்தீபுத் தஹ்தீப்-8/48, மீஸானுல் இஃதிதால்-268, தாரீகுல் கபீர்…
ஆய்வுக்காக: ராவீ-32332-அம்ர் பின் ஷுஐப்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு அஜ்லான் —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: அஹ்மத்-6675, அபூதாவூத்-4202, குப்ரா பைஹகீ-14828, …
- முஹம்மது பின் இஸ்ஹாக் —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25951, அஹ்மத்-6924, 6937, இப்னு மாஜா-3721, திர்மிதீ-2821,
- அப்துல்ஹமீத் பின் ஜஃபர் —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: அஹ்மத்-6962,
- அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: அஹ்மத்-6989, குப்ரா பைஹகீ-14827,
- உமாரா பின் ஃகஸிய்யா —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: ஸயீத் பின் மன்ஸூர், நஸாயீ-5068, குப்ரா நஸாயீ-9285,
- லைஸ் பின் ஸுலைம் —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: அஹ்மத்-6672, அல்முஃஜமுல் அவ்ஸத்-9326,
- இப்னு லஹீஆ —> அம்ர் பின் ஷுஐப் …
பார்க்க: குப்ரா பைஹகீ-14829,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-2985.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்
பார்க்க: அஹ்மத்-23952, முஸ்லிம்-4269,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்