தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-2985

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒரு முஸ்லிமுக்கு உலகில் நரைமுடி ஏற்படும்போது, மாண்பும் உயர்வும் மிக்க அல்லாஹ், அவருக்கு நன்மைகளை எழுதி; தீமைகளை அழித்து; பதவிகளை உயர்த்துகிறான் என்று வந்துள்ள செய்தி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரை முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் அது (முஸ்லிமுக்கு) மறுமையில் ஒளியாகும். இஸ்லாத்தில் இருக்கும் போது ஒருவருக்கு ஒரு முடி நரைத்து விட்டாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; ஒரு பாவத்தை மன்னிக்கிறான்; ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னு ஹிப்பான்: 2985)

ذِكْرُ كَتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا الْحَسَنَاتِ، وَحَطِّ السَّيِّئَاتِ، وَرَفْعَ الدَّرَجَاتِ لِلْمُسْلِمِ بِالشَّيْبِ فِي الدُّنْيَا

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2985.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3061.




  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1243)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா பற்றி சில அறிஞர்கள் விமர்சனம் செய்திருந்தாலும் இவரின் அறிவிப்புகளை ஆய்வு செய்த நடுநிலையான ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் இவர் சுமாரானவர் என்று கருதப்படுகிறார். எனவே தான் நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற பல அறிஞர்கள் இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை என்று கூறுவதாக அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-எண்-203)

கூடுதல் தகவல் பார்க்க: முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா .

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-2985 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2821 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.