தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4202

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நரை முடியை நீக்குவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் மறுமைநாளில் அது அவருக்கு ஒளியாக இருக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா இவ்வாறே அறிவிக்கிறார்.

முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள், “நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதுகிறான்; அவரை விட்டு ஒரு பாவத்தை மன்னிக்கிறான்” என்று அறிவிக்கிறார்.

(அபூதாவூத்: 4202)

بَابٌ فِي نَتْفِ الشَّيْبِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، الْمَعْنَى، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

لَا تَنْتِفُوا الشَّيْبَ، مَا مِنْ مُسْلِمٍ يَشِيبُ شَيْبَةً فِي الْإِسْلَامِ – قَالَ عَنْ سُفْيَانَ: «إِلَّا كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»، وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى – إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4202.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3672.




  • இந்த செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் அவர்கள் ஒரு கருத்தையும், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஒரு கருத்தையும் அறிவிக்கின்றனர்.
  • இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    போன்றோர் ஒரு ஹதீஸின் கருத்தில் அல்லது வார்த்தையில் முரண்பட்டால் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்களின் கருத்தையே எடுக்க வேண்டும் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார். காரணம் மற்றவர்களை விட யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் மிக பலமானவர். இந்தக் கருத்தையே அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர். யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    பற்றி பல அறிஞர்கள் பாராட்டி கூறியுள்ளதை இப்னு ரஜப் அவர்கள் கூறியுள்ளார். (நூல்: ஷரஹு இலலித் திர்மிதீ-1/465)

மேலும் பார்க்க: திர்மிதீ-2821 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.