பாடம்:
நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை.
நபி (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தி அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் வழியாகவும், இன்னும் சிலரின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(திர்மிதி: 2821)
بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ نَتْفِ الشَّيْبِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ: «إِنَّهُ نُورُ المُسْلِمِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ ” قَدْ رُوِيَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ، وَغَيْرِ وَاحِدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2821.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2765.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் வந்துள்ளன. பலவீனமான ஹதீஸ்களும் வந்துள்ளன.
1 . அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் —> (2 . இவரின் தந்தை) ஷுஐப் பின் முஹம்மத் —> (3 . பாட்டனார்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
- இந்த அறிவிப்பாளர்தொடரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
போன்றோர் முர்ஸல் என்றும் அல்லது முன்கதிஃ என்றும் விமர்சித்துள்ளனர்… - இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அறிவிப்பது (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எழுதிவைத்த) ஒரு ஏட்டிலிருந்து என்பதால் இது சரியானதல்ல என்று கூறியுள்ளார். - இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அல்ஹுமைதீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்றோர் இந்த அறிவிப்பாளர்தொடரை ஆதாரமாக ஏற்றுள்ளதை நான் பார்த்துள்ளேன் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மற்ற பலமான செய்திக்கு இந்த அறிவிப்பாளர்தொடர் முரண்படாதபோது ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்… - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரை பற்றிய விமர்சனங்களையும், சிலர் சரியானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறுவர் என்ற விவரங்களையும் கூறிய பின் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியான ஹதீஸ்களில் உயர்ந்த தரம் என்று நாம் கூறவில்லை; இது ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: அல்முஹல்லா-4/38, இலலுத் திர்மிதீ-108/181, தஹ்தீபுத் தஹ்தீப்-8/48, மீஸானுல் இஃதிதால்-268, தாரீகுல் கபீர்…
ஆய்வுக்காக: ராவீ-32332-அம்ர் பின் ஷுஐப் .
- மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர். என்றாலும் தத்லீஸ் செய்பவர்; பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன்படி இவர் இந்த செய்தியின் எந்த அறிவிப்பாளர்தொடரிலும் அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- இமாம் திர்மிதீ அவர்கள் இந்த செய்தியை ஹஸன் என்று கூறியுள்ளார். திர்மிதீ இமாமின் பார்வையில் ஹஸன் என்பதற்கு வேறு விளக்கம் உள்ளது. அது என்னவெனில் பலவீனம் கடுமையாக இல்லாமல் இருந்து வேறு அறிவிப்பாளர்தொடரில் அந்த கருத்து வந்திருந்தால் அந்த செய்தி நம்மிடம் ஹஸன் தரம் என்று திர்மிதீ இமாம் அவர்களே கூறியுள்ளார். இந்த செய்தியை முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களைப் போன்றே அப்துல்ஹமீத் பின் ஜஃபர், இப்னு அஜ்லான், அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் போன்றோரும் வேறுசிலரும் அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர் என்பதால் தான் திர்மிதீ இமாம் அப்படி கூறியுள்ளார்.
- (ஹஸன் தரத்தில் உள்ள பல செய்திகள் இணைவதால் ஸஹீஹுன் லிகைரீ என்ற தரத்தை இவை அடைகின்றன)
- (நரைமுடிக்கு கருப்பு நிறத்தை தவிர்த்து) மற்ற நிறங்களில் சாயமிட்டுக் கொள்வது இந்த ஹதீஸுக்கு முரணானதல்ல என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார். காரணம் சாயமிடுவதால் நரைமுடியை நீக்க வேண்டிய தேவை ஏற்படாது. (நூல்: ஃபத்ஹுல் பாரீ-6/499)
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மது பின் இஸ்ஹாக் —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25951, அஹ்மத்-6924, 6937, இப்னு மாஜா-3721, திர்மிதீ-2821,
- அப்துல்ஹமீத் பின் ஜஃபர் —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: அஹ்மத்-6962,
- இப்னு அஜ்லான் —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: அஹ்மத்-6675, அபூதாவூத்-4202, குப்ரா பைஹகீ-14828,
- அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: அஹ்மத்-6989, குப்ரா பைஹகீ-14827 ,
- உமாரா பின் ஃகஸிய்யா —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: ஸயீத் பின் மன்ஸூர், நஸாயீ-5068, குப்ரா நஸாயீ-9285,
- லைஸ் பின் ஸுலைம் —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: அஹ்மத்-6672, அல்முஃஜமுல் அவ்ஸத்-9326,
- இப்னு லஹீஆ —> அம்ர் பின் ஷுஐப்…
பார்க்க: குப்ரா பைஹகீ-14829,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-2985.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்
பார்க்க: அஹ்மத்-23952, முஸ்லிம்-4269,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்