ஹி 70; 95; 96; 97 - 170; 173; 174; 175, வயது 77.
தரம்: சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தி வேறு குறைகள் இல்லாவிட்டால் சரியானது. மற்ற சிலர் அறிவித்தால் பலவீனமானது.
இயற்பெயர்: அப்துல்லாஹ்
தந்தை பெயர்: லஹீஆ
குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்
தொழில் மற்றும் ஊர் பெயர்: எகிப்தின் நீதிபதி, மார்க்க சட்ட அறிஞர்.
பிறப்பு: ஹிஜ்ரீ-70; 95; 96; 97 கருத்துவேறுபாடு...
இறப்பு: ஹிஜ்ரீ-170; 173; 174; 175 கருத்துவேறுபாடு...
இப்னு யூனுஸ் அவர்களின் ஹி 97-174 என்ற தகவல்படி இவரின் வயது 77.
இப்னு ஹஜர் அவர்கள், இவர் சுமார் 80 வயது வரை வாழ்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கால கட்டம்: 7.
இப்னு லஹீஆ எகிப்தைச் சேர்ந்தவர். இவர் எகிப்தின் நீதிபதியாக இருந்துள்ளார். மேலும் ஹதீஸ்களை அறிவிப்பவராகவும் இருந்துள்ளார்.
1 . இவரைப்பற்றி சிலர் எல்லா நிலையிலும் இவர் பலமானவர் என்றும்,
2 . சிலர் எல்லா நிலையிலும் இவர் பலவீனமானவர் என்றும்,
3 . சிலர், சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் கூறியுள்ளனர்.
1 . இவரைப் பற்றி இப்னு வஹ்ப் அவர்கள், இவர் உண்மையாளர்; நல்லமனிதர் என்று கூறியுள்ளார். யஹ்யா பின் ஹஸ்ஸான் அவர்கள் ஹுஷைம் அவர்களுக்கு பிறகு இவரைவிட மனனசக்தி உடையவரை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். அவரிடம், மக்கள் இப்னு லஹீஆவின் நூல்கள் எரிந்துவிட்டன என்று கூறுகிறார்களே என்று கூறப்பட்டபோது அவரின் நூல் காணாமல் போகவில்லை (அதாவது முழுமையாக எரியவில்லை என்று கூறினார்)
ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், நான் அவரை சந்திப்பதற்காக பலமுறை ஹஜ் செய்துள்ளேன். அவரிடம் அஸல் (ஹதீஸ் நூல்) இருந்தது. எங்களிடம் அதன் பிரிவு உள்ளது என்று கூறியுள்ளார்...
இமாம் அஹ்மத் அவர்கள், ஹதீஸ்களை அதிகமாக அறிவிப்பதிலும், உறுதியான நினைவாற்றலிலும் இப்னு லஹீஆவைப் போன்று யார் எகிப்தில் இருக்கிறார்? என்று கூறியுள்ளார்.
மேலும் இப்னு லஹீஆவின் ஊரைச் சேர்ந்த அஹ்மத் பின் ஸாலிஹ் அவர்கள் இப்னு லஹீஆவை பாராட்டியதாக யஃகூப் பின் ஸுஃப்யான் அவர்கள் கூறியுள்ளார். (இதுபோன்று இன்னும் சிலரும் இவரைப் பாராட்டி கூறியுள்ளனர்)...
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-15/487, தஹ்தீபுத் தஹ்தீப்-2/411, அல்காஷிஃப்-3/182...)
இப்னு லஹீஆ அதிகமாக ஹதீஸை தேடக்கூடியவராக இருந்துள்ளார். அவர் பயணம் செய்வதற்காக ஒரு வரைபடத்தையே கழுத்தில் மாட்டி இருந்துள்ளார். தான் சந்திக்கும் மனிதர்களிடம் உங்களிடம் ஹதீஸ் உள்ளதா, நீங்கள் யாரிடம் ஹதீஸை கேட்டு எழுதிவைத்துள்ளீர்கள் என்று விசாரித்து ஹதீஸை எழுதிக்கொள்வார்.
எனவேதான் அறிஞர்களில் சிலர் இவர் எழுதிவைத்திருந்தவை சரியானது. ஆனால் இவரின் நூல் எரிந்தபோன பின்பு இவர் தனது மனப்பாடத்திலிருந்து அறிவித்ததால் அதிகம் தவறுகள் ஏற்பட்டுவிட்டன என்று கூறியுள்ளனர்.
1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
2 . பிஷ்ர் பின் ஸரிய்
3 . யஹ்யா பின் ஸயீத்.
“இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்’’ என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறியுள்ளார். “நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார்’’ என்று யஹ்யா பின் ஸயீத் கூறியுள்ளார்.
நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14
4 . இப்னு மயீன்
இப்னு மயீன் அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள்.
(நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம் 1, பக். 153)
இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம்: 1, பக். 481)
5 . இவ்வாறே இவர்களுக்கு பின்னால் வந்த பல அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர்.
3 . என்றாலும் சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள், இப்னு லஹீஆவிடமிருந்து அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள், நான் இப்னு லஹீஆவின் ஹதீஸ்களில் இப்னு முபாரக் போன்றோர் அறிவிக்கும் செய்திகளைத் தவிர மற்றவைகளை ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்று கூறினார் என நுஐம் பின் ஹம்மாத் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் : 411)
2 . இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ, அப்துல்லாஹ் பின் மஸ்லமா ஆகியோரைப் போன்று...
(நூல்: ஸியரு அஃலாமின் நுபலாஃ, பாகம் : 8, பக்கம் : 11)
3 . இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 166)
4 . இப்னு வஹ்ப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 5, பக்கம்: 330...
5 . அவ்வாறே குதைபா பின் ஸயீத் அவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.
(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512, தஹ்தீபுல் கமால்-15/494)
6 . சிலர் ஆய்வு செய்து வேறு சில அறிவிப்பாளர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிப்பதும் சரியானது என்று கூறியுள்ளனர். இப்னு லஹீஆவின் நூல் எரிந்தது ஹிஜ்ரீ 170 இல் தான். எனவே அறிவிப்பாளர்கள் விவரம் பற்றிய நூற்களில் அதற்கு முன் அவரிடமிருந்து கேட்டவர்கள் என்று மேலும் சிலர் உள்ளனர்.
1 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-
2 . அப்துல்லாஹ் பின் முபாரக்-
3 . அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ-
4 . அப்துல்லாஹ் பின் மஸ்லமா-
5 . குதைபா பின் ஸயீத்-
6 . லஹீஆ பின் ஈஸா-
7 . அபுல்அஸ்வத்-
8 . ஸயீத் பின் அபூமர்யம்-
9. இப்னு ரும்ஹ்-
10 . பிஷ்ர் பின் பக்ர்-
11 . இஸ்ஹாக் பின் ஈஸா-
12 . அபூஸயீத் மவ்லா பனூஹாஷிம்
13 . யஹ்யா பின் இஸ்ஹாக்
14 . வலீத் பின் மஸீத்
15 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
16 . லைஸ் பின் ஸஃத்
...ஆய்வில்..
அபூஹாதிம், அபூஸுர்ஆ போன்றோர், இவர் பலவீனமானவரே. என்றாலும் இவரைப் பற்றி முடிவு செய்வதில் குழப்பம் உள்ளது. எனவே இவர் அறிவிக்கும் செய்திகளை (மற்றவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்களா? என்று ஆய்வு செய்ய) எழுதிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
அபூஸுர்ஆ அவர்களிடம், இப்னுலஹீஆவிடம் ஆரம்பத்தில் ஹதீஸ்களை கேட்டவர்களின் செய்தியை பற்றி கேட்டபோது ஆரம்பத்தில் கேட்டவர்களின் செய்தியாக இருந்தாலும், கடைசியில் கேட்டவர்களின் செய்திகளாக இருந்தாலும் எல்லாம் சமமானதே. என்றாலும் இப்னுல் முபாரக், இப்னு வஹ்ப் போன்றோர் அவரின் உஸூலைப் பின்பற்றினர் என்று கூறினார். (இதன் பொருள் நூலிலிருந்து எழுதிக்கொண்டனர் என்பதாக இருக்கலாம்)
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/145, இக்மாலு தஹ்தீபில் கமால்-8/143...)
இப்னு ஹிப்பான் அவர்கள், இவர் நல்ல மனிதர் தான். என்றாலும் இவரின் அறிவிப்புகளை நான் ஆய்வு செய்து பார்த்தபோது இவர் தத்லீஸ் செய்திருப்பதை-அதாவது பலவீனமானவர்களை மறைத்து அறிவித்திருப்பதைக் கண்டேன். மக்கள் இவரின் நூலிலிருந்து ஹதீஸை எழுதிக் கொள்வதற்கு கொண்டு செல்வர். பின்பு அவர் அறிவிக்காத செய்திகளையும் அதில் சேர்த்துவிடுவர். இப்னு லஹீஆ அதைப் பொருட்படுத்தாமல் தன் ஹதீஸையும், மற்றவர்களின் ஹதீஸையும் மக்களுக்கு படித்துக்காட்டுவார். எனவே இவரின் நூல் எரிவதற்கு முன் இவரிடமிருந்து அறிவிப்பவர்களின் செய்தியாக இருந்தாலும், இவரின் நூல் எரிந்தபின் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் அறிவிக்கும் செய்தியாக இருந்தாலும் அனைத்தையும் விட்டுவிடுவது அவசியம் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/411, தஃரீஃபு அஹ்லித்தக்தீஸ்-1/177)
(319 / 323) - عبدالله بن لهيعة بن عقبة وربما نسب إلى جده، يعتبر بما يروي عنه العبادلة: ابن المبارك والمقرئ وابن وهب
தாரகுத்னீ அவர்கள் (இப்னு லஹீஆவின் நூல் எரிவதற்கு முன் அவரிடமிருந்து செவியேற்றவர்களான) இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ, இப்னு வஹ்ப் போன்றோர் இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் கவனிக்கத்தக்கவை (ஏற்கத்தக்கவை) என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்: அள்ளுஅஃபாஉ வல்மத்ரூகீன்-323)
தாரகுத்னீ அவர்களின் கருத்தை இவ்வாறே சில அறிஞர்கள் புரிந்துள்ளனர்.
نرى ان الدارقطني يسلك منهجا معتدلا وسطا فيقول: (ان اعتبر له بحديث بعد حديثا صالحا إذا كان عن الائمة.
) فقول الدارقطني فيه هو قول الناقد المتأمل في رواياته العارف بها فانه لم يتركه مطلقا ولم يوثقه مطلقا..بل اعطى فيه حكما وسطا الا هو ان اعتبر له بحديث يعد صالحا فهو الحديث الذي رواه عنه الائمة.
وكذا الحال بالنسبة للترجمة رقم (323) من الضعفاء وهو عبد الله بن لهيعة فانه قال فيه: (يعتبر بما يروي عنه العبادلة، ابن المبارك، والمقرئ، وابن وهب) .
வேறு சிலர் இஃதிபார் என்பதின் கருத்து: ஹதீஸ்கலை விதியில் கூறப்படும் "இது போன்று வேறு செய்தி வந்துள்ளதா என்றுஆய்வு செய்தல்" என்று பொருள் கொள்கின்றனர். இதனடிப்படையில் தாரகுத்னீ அவர்களின் பார்வையில் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
وقال ابن حبان أيضاً: ( … فوجب التنكب عن رواية المتقدمين عنه قبل احتراق كتبه، لما فيها من الأخبار المدلَّسة عن الضعفاء والمتروكين، ووجب ترك الاحتجاج برواية المتأخرين عنه بعد احتراق كتبه، لما فيه مما ليس من حديثه).
وقال الدارقطني في «الضعفاء»: (يعتبر بما يروي عنه العبادلة: ابن المبارك، والمقرئ، وابن وهب).
فليس رواية العبادلة عنده صحيحة، بل ضعيفة يُعتبر بها.
சமீப விமர்சனங்கள்