தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6937

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள்.

மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், “இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு மனிதரின் முடி நரைத்து விட்டாலும் அதற்காக அவருக்கு ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அவரை விட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகிறது; ஒரு நன்மை எழுதப்படுகிறது.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6937)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَتْفِ الشَّيْبِ» ،

وَقَالَ: «هُوَ نُورُ الْمُؤْمِنِ» ،

وَقَالَ: «مَا شَابَ رَجُلٌ فِي الْإِسْلَامِ شَيْبَةً، إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَمُحِيَتْ عَنْهُ بِهَا سَيِّئَةٌ، وَكُتِبَتْ لَهُ بِهَا حَسَنَةٌ»

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6937.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6761.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் தத்லீஸ் செய்பவர். இந்த செய்தியின் எந்த அறிவிப்பாளர்தொடரிலும் அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . மேலும் பார்க்க: திர்மிதீ-2821 .

2 . நான்காவது பகுதியான-கடைசி பகுதியின் கருத்தில் வரும் செய்திகளை பார்க்க: அபூதாவூத்-4943 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.