நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(அபூதாவூத்: 4943)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ السَّرْحِ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنِ ابْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، – يَرْوِيهِ قَالَ: ابْنُ السَّرْحِ – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4943.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4294.
- இந்தக் கருத்தில் சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும் ஹதீஸ்கள் வந்துள்ளன. பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களிலும் ஹதீஸ்கள் வந்துள்ளன.
- இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு ஆமிர், ஷுஐப் பின் முஹம்மத் ஆகியோர் அறிவித்துள்ளனர். இப்னு ஆமிர் என்பவர் உபைதுல்லாஹ் பின் ஆமிர் அல்மக்கீ என்பவர் ஆவார். சிலர் அப்துல்லாஹ் பின் ஆமிர் என்று அறிவித்திருப்பது தவறாகும் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்ற ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2211)
(அப்துல்லாஹ் பின் ஆமிர் என்றால் இந்த செய்தி பலவீனமடைந்து விடும். மேலும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் இப்னு ஆமிர் என்பவரை அப்துர்ரஹ்மான் பின் ஆமிர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மிஸ்ஸீ இமாம் அவர்கள் உபைதுல்லாஹ் பின் ஆமிர் என்பதே சரி என்று கூறி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளார். (பார்க்க: ஹாகிம்-209)
- அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து முஹம்மது பின் இஸ்ஹாக், அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர். முஹம்மது பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்திருந்தாலும் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸும் முஹம்மது பின் இஸ்ஹாக் போன்று அறிவித்துள்ளார் என்பதால் அம்ர் பின் ஷுஐப் அவர்களின் வழியாக வரும் செய்தி குறைந்த பட்சம் ஹஸன் தரத்தில் உள்ள செய்தியாகும். மேலும் ஸஹீஹுன் லிகைரிஹீ என்ற தரத்தை அடைகிறது.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> உபைதுல்லாஹ் பின் ஆமிர் அல்மக்கீ —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-597, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25359 , அஹ்மத்-7073 , அபூதாவூத்-4943 ,
- அம்ர் பின் ஷுஐப் —> ஷுஐப் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6733 , 6935 , 6937 , அல்அதபுல் முஃப்ரத்-363 , திர்மிதீ-1920 ,
….அல்அதபுல் முஃப்ரத்-354 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1919 .
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-458 .
4 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-421 .
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-353 .
6 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-356 .
7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-209 .
8 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5927 .
…
சமீப விமர்சனங்கள்