தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2733

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

பாடம்: 45

(நரை) முடிக்கு சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.

2733. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்) அவர்கள் எங்களின் தோழராக இருந்தார். அவரின் தாடிமுடியும், தலைமுடியும் வெண்மையாக இருந்தது. ஒரு நாள் காலையில் எங்களிடம் வந்தபோது தாடிமுடிக்கும், தலைமுடிக்கும் சிகப்பு நிற சாயமிட்டுருந்தார். அப்போது மக்கள் இது மிக அழகாக உள்ளதே என்று கூறினர்.

அதற்கு அவர் கூறியதாவது:

எனது தாயாரும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்கள் தனது நுகைலா எனும் அடிமைப் பெண்ணை நேற்றிரவு என்னிடம் அனுப்பி நான் முடிக்கு சாயமிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

மேலும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (இவ்வாறு) சாயமிடுவார்கள் என்றும் எனக்கு அறிவித்தார்கள்.


45 – مَا جَاءَ فِي صُبْغِ الشَّعَرِ.

حَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَن أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،

أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَ، وَكَانَ جَلِيسًا لَهُمْ، وَكَانَ أَبْيَضَ اللِّحْيَةِ وَالرَّأْسِ قَالَ: فَغَدَا عَلَيْهِمْ ذَاتَ يَوْمٍ وَقَدْ حَمَّرَهُمَا، قَالَ: فَقَالَ لَهُ الْقَوْمُ: هَذَا أَحْسَنُ، فَقَالَ: إِنَّ أُمِّي عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَرْسَلَتْ إِلَيَّ الْبَارِحَةَ جَارِيَتَهَا نُخَيْلَةَ، فَأَقْسَمَتْ عَلَيَّ لأَصْبُغَنَّ، وَأَخْبَرَتْنِي أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَانَ يَصْبُغُ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2733.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1707.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . யஹ்யா அல்லைஸீ

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ

4 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ

5 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான்

6 . அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்)

7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2733, 2734, 2735, 2736, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4269,

யஹ்யா அல்லைஸீ

யஹ்யா அல்லைஸீ-அல்லைஸீ (ரஹ்) – Yahya bin Yahya bin Kathir

இறப்பு: ஹிஜ்ரி 234

தரம்: நம்பகமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் யஹ்யா பின் கஸீர்

தந்தை பெயர்: யஹ்யா

வம்சம்: அல்-பர்பரீ, அல்-மஸ்மூதீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: குர்துபா

பயணித்த ஊர்கள்: அந்துலுஸ், குர்துபா

பிறப்பு: ஹிஜ்ரி 152

இறப்பு: ஹிஜ்ரி 234

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் யஹ்யா பின் கஸீர் அல்லைஸீ ரஹ் அவர்கள் அந்துலுஸ் நாட்டின் குர்துபா நகரைச் சேர்ந்த ஒரு நம்பகமான ஹதீஸ் அறிவிப்பாளர் மற்றும் இமாம் ஆவார். ஹிஜ்ரி 152 இல் பிறந்த இவர், ஹிஜ்ரி 234 இல் மரணமடைந்தார். மாலிக் இமாம், லைஸ் பின் ஸஅத், ஸுஃப்யான் பின் உயைனா போன்ற பல அறிஞர்களிடம் கல்வி கற்றார்.

அந்துலுஸ் பகுதியில் மாலிக் இமாமின் மத்ஹபை பரப்பியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. இவர் தனது காலத்தில் அந்துலுஸின் மிக முக்கியமான அறிஞராகவும் நீதிபதிகளை நியமிப்பதில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸியாத் பின் அப்துர்ரஹ்மான் ஷப்த்தூன், யஹ்யா பின் முளர், மாலிக் இமாம், லைஸ் பின் ஸஅத், ஸுஃப்யான் பின் உயைனா, அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துர்ரஹ்மான் பின் அல்-காஸிம் அல்அத்தீகீ, காஸிம் பின் அப்துல்லாஹ் அல்உமரீ, அனஸ் பின் அய்யாழ் அல்லைஸீ, நாஃபிஉ பின் அபூ நுஐம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ மர்வான் உபைதுல்லாஹ், முஹம்மத் பின் அப்பாஸ் பின் வலீத், முஹம்மத் பின் வத்தாஹ், பகிய்யு பின் மக்லத், ஸபாஹ் பின் அப்துர்ரஹ்மான் அல்அத்தீகீ

வேறு பெயர்கள்: யஹ்யா பின் யஹ்யா பின் கஸீர்


ஆதாரம்: muslimscholars.info (38713) · Should verify

மாலிக் இமாம்

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ

يحيى بن سعيد الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 144 அல்லது அதற்குப் பிறகு, அல்ஹாஷிமியா, அன்பார்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா பின் ஸயீத் பின் கைஸ் பின் அம்ர் பின் ஸஹ்ல் பின் தஃலபா பின் அல்ஹாரிஸ் பின் ஸைத் பின் தஃலபா பின் ஃகனம் பின் மாலிக் பின் அன்நஜ்ஜார்

தந்தை பெயர்: ஸயீத் பின் கைஸ் பின் கஹ்த்

வம்சம்: அன்ஸாரீ, கஸ்ரஜ், பனூ மாலிக் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூ ஸயீத், நீதிபதி

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, இராக், அல்ஹாஷிமியா, அன்பார், ஆப்பிரிக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 70க்கு முன்

இறப்பு: ஹிஜ்ரி 144 அல்லது அதற்குப் பிறகு, அல்ஹாஷிமியா, அன்பார்

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ ரஹ் அவர்கள் மதீனாவைச் சேர்ந்த மிகப் பலமான தாபிஈ ஆவார். அவர் மதீனாவின் நீதிபதியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார். அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை விட மிக உறுதியானவர் யாரும் இல்லை' என்று கூறியுள்ளார்.

அந்நஸாயீ ரஹ் அவர்கள் இவரை 'மிகப் பலமானவர், உறுதியானவர்' என்றும் 'மிகப் பலமானவர், நம்பகமானவர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். அய்யூப் ரஹ் அவர்கள், 'யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை விட அறிவில் சிறந்த ஒருவரை நான் மதீனாவில் விட்டு வரவில்லை' என்று கூறியுள்ளார். லைஸ் பின் ஸஃத் ரஹ் அவர்கள், 'இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீயை விட யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீயை ஒத்த ஒருவரை நான் கண்டதில்லை.

இவ்விருவரும் இல்லையெனில் பல சுன்னத்துகள் மறைந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், ஸயீத் பின் அல்முஸய்யப், அல்காஸிம் பின் முஹம்மத், உம்ரா பின்த் அப்துர்ரஹ்மான், அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான், முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ, அஸ்ஸுஹ்ரீ, நாஃபிஃ, அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ, உபாதா பின் அல்வலீத், அம்ர் பின் யஹ்யா, ஹுமைத் பின் அபூஹுமைத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஸுஹ்ரீ, மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அல்லைஸ் பின் ஸஃத், இப்னு இஸ்ஹாக், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்ராஹீம் பின் தஹ்மான், யஸீத் பின் ஹாரூன், ஜஃபர் பின் அவ்ன்

வேறு பெயர்கள்: யஹ்யா பின் ஸயீத்


ஆதாரம்: muslimscholars.info (11062) · Should verify

முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ

محمد بن إبراهيم القرشي

தரம்: பலமானவர்.


வமிசம்: அல்குரஷீ, அத்தைமீ,

பயணம் செய்த ஊர்கள்: எகிப்து.

அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யஃகூஸ் (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆயிஷா (ரலி)

நபித்தோழி, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.