பாடம்:
(முடிக்கு) கருப்புச் சாயமிடுவது குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள், சில புறாக்களின் நெஞ்சுப் பகுதியில் உள்ளதைப் போன்ற கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 4212)بَابُ مَا جَاءَ فِي خِضَابِ السَّوَادِ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ، كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3679.
Abu-Dawood-Shamila-4212.
Abu-Dawood-Alamiah-3679.
Abu-Dawood-JawamiulKalim-3681.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அபூதவ்பா-ரபீஉ பின் நாஃபிஃ
3 . உபைதுல்லாஹ் பின் அம்ர்
4 . அப்துல்கரீம் பின் மாலிக்-அல்ஜஸரீ
5 . ஸயீத் பின் ஜுபைர்
6 . இப்னு அப்பாஸ் (ரலி)
இதில் இடம்பெறும் அப்துல்கரீம் என்பவர் அப்துல்கரீம் பின் அபுல்முகாரிக்-அபூஉமைய்யா அல்பஸரீ என்று இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் குறிப்பிட்டுவிட்டு (இவர் விடப்பட்டவர் என்பதால்) இந்தச் செய்தியை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்.
(இது போன்று பல ஹதீஸ்களில் இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் தவறாக கூறியுள்ளார் என்று தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.)
உபைதுல்லாஹ் பின் அம்ர் அவர்களின் முக்கியமான ஆசிரியர் அப்துல்கரீம் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அல்ஜஸரீ ஆவார். இவர் மிகப் பலமானவர். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
போன்ற சில நூல்களில் அப்துல்கரீம் என்பதுடன் அல்ஜஸரீ என்பதையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதால் இவர் பலமானவரான அப்துல்கரீம் ஆவார்.
அலாயீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றவர்கள் இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
தவறாக கூறிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்கரீம் அல்ஜஸரீ —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: தபகாத்துல் குப்ரா-, அஹ்மத்-2470, அபூதாவூத்-4212, குப்ரா நஸாயீ-9293, நஸாயீ-5075, முஸ்னத் அபீ யஃலா-2603, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3699, அல்முஃஜமுல் கபீர்-12254, குப்ரா பைஹகீ-14824, …
- அப்துல்கரீம் பின் கைஸ் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3803,
2 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4269, …
சமீப விமர்சனங்கள்