தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7528

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 (இரண்டு பேர் பொறாமைகொள்ளத்தக்க வர்கள்.) அவர்களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்குக் குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும் பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படு கிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்படுமாயின் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே! என்று கூறுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியது. குர்ஆனை ஒதி அதன்படி செயல்படுவ தென்பது, (மற்ற செயல்களைப் போன்றே) அந்த மனிதரின் செயல்தான் என அல்லாஹ் விவரிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வேறுபட் டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) புகழுயர்ந்த இறைவன் கூறுகின்றான்: நன்மை செய்யுங்கள்; நீங்கள் வெற்றியடையலாம். (22:77)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக்கண்ட) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கு வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!’ என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்’ என்கிறார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 97

(புகாரி: 7528)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” رَجُلٌ آتَاهُ اللَّهُ القُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ يَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا فَعَلْتُ كَمَا يَفْعَلُ

فَبَيَّنَ أَنَّ قِيَامَهُ بِالكِتَابِ هُوَ فِعْلُهُ»، وَقَالَ: {وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَاخْتِلاَفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ}، وَقَالَ جَلَّ ذِكْرُهُ: {وَافْعَلُوا الخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ} [الحج: 77]

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لاَ تَحَاسُدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ القُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، فَهُوَ يَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ، فَيَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ عَمِلْتُ فِيهِ مِثْلَ مَا يَعْمَلُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.