தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7530

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 இறைத்தூதரே! உங்கள் இறைவனிட மிருந்து உங்களுக்கு அருளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரையுங்கள். (இந்தப் பணியை) நீங்கள் செய்யாவிட்டால் அவனது தூதை நீங்கள் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும் எனும் (5:67ஆவது) இறைவசனம். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் பாதுகாவலரை நியமிக்கின் றான்). (72:28) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62) கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதாவது ஒருவருடைய நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள் என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்கûளை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம். மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) அந்த வேதம்’ (தா-க்கல் கிதாபு’)என்பது இந்தக் குர்ஆனைக் குறிக்கின்றது. இறையச்சமுடை யோருக்கு நேர்வழியாகும் என்பதற்குத் தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள். இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும் (தா-க் கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபு களில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்கு பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் என் சிறிய தந்தை ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பினார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கின் றேன் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.

 முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நம்மில் (இறைவழியில்) கொல்லப்படுகிறவர் சொர்க்கத்திற்குச் செல்கிறார்’ எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169

இதை ஜுபைர் இப்னு ஹய்யா(ரஹ்) அறிவித்தார்.

Book : 97

(புகாரி: 7530)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: (يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالاَتِهِ)

وَقَالَ الزُّهْرِيُّ: «مِنَ اللَّهِ الرِّسَالَةُ، وَعَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَلاَغُ، وَعَلَيْنَا التَّسْلِيمُ» وَقَالَ اللَّهُ تَعَالَى: {لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسَالاَتِ رَبِّهِمْ} [الجن: 28]، وَقَالَ تَعَالَى: (أُبْلِغُكُمْ رِسَالاَتِ رَبِّي) وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ: ” حِينَ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالمُؤْمِنُونَ} [التوبة: 105] وَقَالَتْ عَائِشَةُ: ” إِذَا [ص:155] أَعْجَبَكَ حُسْنُ عَمَلِ امْرِئٍ فَقُلْ: {اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالمُؤْمِنُونَ} [التوبة: 105]: وَلاَ يَسْتَخِفَّنَّكَ أَحَدٌ ” وَقَالَ مَعْمَرٌ: {ذَلِكَ الكِتَابُ} [البقرة: 2] «هَذَا القُرْآنُ» {هُدًى لِلْمُتَّقِينَ} [البقرة: 2]: «بَيَانٌ وَدِلاَلَةٌ»، كَقَوْلِهِ تَعَالَى: {ذَلِكُمْ حُكْمُ اللَّهِ} [الممتحنة: 10]: «هَذَا حُكْمُ اللَّهِ» {لاَ رَيْبَ} [البقرة: 2]: «لاَ شَكَّ»، {تِلْكَ آيَاتُ} [البقرة: 252]: يَعْنِي هَذِهِ أَعْلاَمُ القُرْآنِ، وَمِثْلُهُ: {حَتَّى إِذَا كُنْتُمْ فِي الفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ} [يونس: 22]: «يَعْنِي بِكُمْ» وَقَالَ أَنَسٌ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالَهُ حَرَامًا إِلَى قَوْمِهِ، وَقَالَ: أَتُؤْمِنُونِي أُبَلِّغُ رِسَالَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَجَعَلَ يُحَدِّثُهُمْ

حَدَّثَنَا الفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا المُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ المُزَنِيُّ، وَزِيَادُ بْنُ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ جُبَيْرِ بْنِ حَيَّةَ، قَالَ المُغِيرَةُ

أَخْبَرَنَا نَبِيُّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رِسَالَةِ رَبِّنَا: «أَنَّهُ مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الجَنَّةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.