தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7532

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! உயர்ந்தோன் அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவம் எது?’ என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வணங்குவதாகும்’ என்று பதிலளித்தார்கள். அவர், ‘பிறகு எது?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்’ என்று பதிலளித்தார்கள். அவர், ‘பிறகு எது?’ என்று கேட்க, நபியவர்கள் ‘உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இச்செயலைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமைநாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்’ எனும் வசனத்தை (திருக்குர்ஆன் 25:68) அருளினான்.171

Book :97

(புகாரி: 7532)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ

قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ»، قَالَ: ثُمَّ أَيْ؟ قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ»، قَالَ: ثُمَّ أَيْ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهَا: {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ، وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا يُضَاعَفْ لَهُ العَذَابُ} [الفرقان: 69] الآيَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.