தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7533

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 (நபியே!) கூறுக: (யூதர்களே!) தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக் காட்டுங்கள் எனும் (3:59ஆவது) இறைவசனம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள். இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அதன்படி செயல்பட்டார்கள். உங்களுக்குக் குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் அதன்படி செயல்பட்டீர்கள்.172 அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதுகி றார்கள் எனும் (2:121ஆவது) வசனத்திற்கு அபூரஸீன் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கை யில் அதைப் பின்பற்றி முறையாக அதன்படி செயல்படுவார்கள் என்று கூறியுள்ளார்கள். யுத்லா’ எனும் சொல்லுக்கு ஓதப்படுதல்’ என்று பொருள். ஹஸனுத் திலாவத்’ என்றால்,குர்ஆனை அழகிய முறையில் ஓதுதல் என்று பொருள். குர்ஆன் மீது (உண்மையான) நம்பிக்கை கொண்டவர்தாம் அதன் சுவையையும் பயனையும் அடைவார். அதை உறுதியோடு நம்பியவர்தாம் உரிய முறையில் அதை சுமப்பார். அல்லாஹ் கூறுகின்றான்: தவ்ராத் வேதத்தைச் செயல்படுத்தும் (பொறுப்புச்) சுமை வழங்கப்பட்டு அதை சுமக்கத் தவறியவர்கள் ஏடுகளைச் சுமக்கும் கழுதை போன்றவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை நம்ப மறுத்துவிட்டவர்களின் நிலை மிகவும் கெட்டது. அக்கிரமக் காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை (62:5). நபி (ஸல்) அவர்கள் கீழ்ப்படிதல் (இஸ்லாம்), நம்பிக்கை (ஈமான்), தொழுகை ஆகிய அனைத்தையும் செயல்’ (அமல்) என்றே குறிப்பிட்டார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இஸ்லாத்தை ஏற்ற பின் அதிகமான நன்மையை எதிர்பார்த்துச் செய்த நல்லறம் எது? என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், அதிக நன்மையை எதிர்பார்த்து நான் செய்த நற்செயல் எதுவெனில், நான் அங்கசுத்தி (உளூ) செய்து தூய்மையாகிக்கொள்ளும்போதெல்லாம் (இரண்டு ரக்அத்கள்) தொழுதுகொள்வேன் என்று பதில் சொன்னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடம், நற்செயல்களில் சிறந்தது எது? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதும், பின்னர் ஜிஹாத் எனும் அறப்போர் புரிவதும் பின்னர், இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஹஜ்ஜும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.173

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது.

பிறகு உங்களுக்குக் குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், ‘இவர்கள் வேலை செய்தோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்’ என்று கூறினர். அதற்கு அல்லாஹ், ‘நான் உங்களுக்குரிய உரிமை(கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?’ என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், ‘அது (-முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்’ என்று சொன்னான். 174

Book : 97

(புகாரி: 7533)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا} [آل عمران: 93]

وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُعْطِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا بِهَا، وَأُعْطِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا بِهِ، وَأُعْطِيتُمُ القُرْآنَ فَعَمِلْتُمْ بِهِ» وَقَالَ أَبُو رَزِينٍ: {يَتْلُونَهُ حَقَّ تِلاَوَتِهِ} [البقرة: 121]: «يَتَّبِعُونَهُ وَيَعْمَلُونَ بِهِ حَقَّ عَمَلِهِ»، يُقَالُ: {يُتْلَى} [النساء: 127]: ” يُقْرَأُ، حَسَنُ التِّلاَوَةِ: حَسَنُ القِرَاءَةِ لِلْقُرْآنِ “، {لاَ يَمَسُّهُ} [الواقعة: 79]: «لاَ يَجِدُ طَعْمَهُ وَنَفْعَهُ إِلَّا مَنْ آمَنَ بِالقُرْآنِ، وَلاَ يَحْمِلُهُ بِحَقِّهِ إِلَّا المُوقِنُ، لِقَوْلِهِ تَعَالَى»: {مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا، كَمَثَلِ الحِمَارِ [ص:156] يَحْمِلُ أَسْفَارًا بِئْسَ مَثَلُ القَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ، وَاللَّهُ لاَ يَهْدِي القَوْمَ الظَّالِمِينَ} [الجمعة: 5] وَسَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الإِسْلاَمَ وَالإِيمَانَ وَالصَّلاَةَ عَمَلًا، قَالَ أَبُو هُرَيْرَةَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبِلاَلٍ: «أَخْبِرْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ»، قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ إِلَّا صَلَّيْتُ وَسُئِلَ أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ، ثُمَّ الجِهَادُ، ثُمَّ حَجٌّ مَبْرُورٌ»

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَنْ سَلَفَ مِنَ الأُمَمِ، كَمَا بَيْنَ صَلاَةِ العَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ، فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ، فَعَمِلُوا بِهِ حَتَّى صُلِّيَتِ العَصْرُ ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيتُمُ القُرْآنَ، فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الكِتَابِ: هَؤُلاَءِ أَقَلُّ مِنَّا عَمَلًا وَأَكْثَرُ أَجْرًا، قَالَ اللَّهُ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا؟ قَالُوا: لاَ، قَالَ: فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.