தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7535

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 நிச்சயமாக, மனிதன் பதற்றமிக்கவனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனுக்குத் துன்பம் நேரும் போது பொறுமை இழந்து விடுகின்றான்; நன்மை ஏற்படும் போது (அது பிறருக்குக் கிடைக்காதவாறு) தடுத்து விடுகின்றான் எனும் (70:19-21) வசனங்கள்.

 அம்ர் இப்னு தஃக்லிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறு சிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்றவர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அவர்கள், ‘நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன். மற்றொருவரைவிட்டுவிடுகிறேன். நான் எவருக்குக் கொடுக்கிறேனோ அவரை விட நான் எவரைவிட்டுவிடுகிறானோ அவர் தாம் எனக்கு மிகவும் பிரியமானவராவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல்விட்டுவிடுகிறேன். அத்தகையை (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தாம் அம்ர் இப்னு தஃக்லிப்’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு (புகழ்ந்து) கூறியதற்கு பதிலாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன். 176

Book : 97

(புகாரி: 7535)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّ الإِنْسَانَ خُلِقَ هَلُوعًا، إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا، وَإِذَا مَسَّهُ الخَيْرُ مَنُوعًا} [المعارج: 20]

هَلُوعًا: ضَجُورًا

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الحَسَنِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَالٌ فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ، فَبَلَغَهُ أَنَّهُمْ عَتَبُوا، فَقَالَ: «إِنِّي أُعْطِي الرَّجُلَ وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَيَّ مِنَ الَّذِي أُعْطِي، أُعْطِي أَقْوَامًا لِمَا فِي قُلُوبِهِمْ مِنَ الجَزَعِ وَالهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الغِنَى وَالخَيْرِ» مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ، فَقَالَ عَمْرٌو: مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمْرَ النَّعَمِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.