அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மர்யமின் மைந்தர் (ஈசா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்கு இமாமாக இருந்தால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்களிடம் நான், “அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு இமாமாக இருக்க (மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால்…)” என இடம்பெற்றுள்ளதே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்கள் “மர்யமின் மைந்தர் உங்களுக்கு இமாமாக இருந்தால்…” என்பதன் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். நான், “நீங்களே கூறுங்கள்!” என்றேன். அப்போது அவர்கள், “உங்களுடைய இறைவனின் வேதத்தின்படியும் உங்களுடைய நபியின் வழிமுறைப்படியும் உங்களை வழிநடத்திச் செல்வார் என்று பொருள்” என்றார்கள்.
Book : 1
(முஸ்லிம்: 246)وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ فَأَمَّكُمْ مِنْكُمْ؟»، فَقُلْتُ لِابْنِ أَبِي ذِئْبٍ: إِنَّ الْأَوْزَاعِيَّ، حَدَّثَنَا عَنِ الزُّهْرِيِّ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، «وَإِمَامُكُمْ مِنْكُمْ» قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ: «تَدْرِي مَا أَمَّكُمْ مِنْكُمْ؟» قُلْتُ: تُخْبِرُنِي، قَالَ: «فَأَمَّكُمْ بِكِتَابِ رَبِّكُمْ تَبَارَكَ وَتَعَالَى، وَسُنَّةِ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Tamil-246
Shamila-155
JawamiulKalim-228
சமீப விமர்சனங்கள்