இந்த சாஃப்ட்வேர் பற்றி

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இது ஒரு ஹதீஸ் சாஃப்ட்வேர்:  மக்தபத்துஷ் ஷாமிலா (المكتبة الشاملة – Maktabah Shamilah) என்பது எப்படி ஒரு ஹதீஸ் சாஃப்ட்வேரோ அதுபோல இந்த (https://quranandhadis.com) இணையதளமும் PHP அடிப்படையில் இயக்கக்கூடிய ஒரு (PHP Web-based Software) சாஃப்ட்வேர் தான். ஒருபக்கம், சாஃப்ட்வேர் பணியும், மற்றொரு பக்கம் ஹதீஸ் தரம் பிரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நீங்கள் ஒரு ஹதீஸ் கலை அறிஞராக இருந்தால், இந்த பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

நோக்கம்:  ஹதீஸ் நூல்களை தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், ஸ்பானிஷ் போன்ற உலகின் பல்வேறு முக்கிய மொழிகளில்,  ஹதீஸ் அறிவிப்பாளர் தரத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த இணையதள Software உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியில் ஹதீஸ் தரத்தை தொகுத்து விட்டால், அது தான் அனைத்து மொழிகளுக்கும் உரியது.

நாஸிருத்தீன் அல்பானி உட்பட பல நல்லறிஞர்கள் இந்த பணியில் தங்களது வாழ்வை அர்ப்பணித்துள்ளார்கள். அதனை மறு ஆய்வு செய்து வெளியிட்டாலே, ஏராளமான ஹதீஸ்களின் தரம் கிடைத்துவிடும். நம்முடைய இந்த காலகட்டத்திலேயே பெரும்பாலான ஹதீஸ் நூல்களை தரம் பிரித்து விடவேண்டும், மாபெரும் ஸதகத்துல் ஜாரியா-வாக அமையும் இந்த நல்வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம். எங்களது இந்த நோக்கம் நிறைவேற, துஆச் செய்யுங்கள். இது பல்வேறு அறிஞர்களின் கூட்டு உழைப்பு. இந்த பணிக்கு பின்னால் உழைக்கும் அனைத்து அறிஞர்களுக்காகவும், அவர்களின் மறுமை வெற்றிக்காகவும் துஆச் செய்யுங்கள்.

தவறுகள் இருந்தால்: இந்த இணையதள சாஃப்ட்வேரில், ஹதீஸ்களை எங்களால் முடிந்த அளவு சரியான முறையில் தரம் பிரித்து வருகிறோம். அல்லாஹ்வின் தூதருடைய ஒரு சொல்லைக் கூட விட்டுவிடக்கூடாது என்பதிலும், பிறருடைய சொல்லை அல்லாஹ்வுடைய தூதருடைய சொல் என்று கூறிவிடக் கூடாது என்பதிலும் மிக அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இதில் ஏதேனும் தவறுகளை கண்டால், கண்டிப்பாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும். தவறெனில் அதை உடனே மாற்றிக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளதா? இல்லையா? இல்லையெனில் சம்பந்தப்பட்ட அறிவிப்பாள்களின் குறைகள் என்னென்ன என்பதனை, இந்த சாஃப்ட்வேரில் தெளிவாக பார்க்க முடியும். (மிகவும் விரிவான Cloud Database பணிகள் நடைபெற்று வருகிறது). சில நேரங்களில் ஒரு ஹதீஸ் அல்லது அறிவிப்பாளர் தொடர்பாக, இருவேறு அறிஞர்கள் இருவேறு கருத்துக்களை கொண்டிருந்தால், தெளிவான முடிவு எட்டாத பட்சத்தில், அது அப்படியே பதிவு செய்யப்படும்.

ஹதீஸ் விவாத சபை: இந்த பணி விரிவாக்கம் செய்யப்படும் போது, அல்லாஹ் நாடினால், ஹதீஸ் விவாத சபை ஏற்படுத்தப்பட்டு அதில் விவாதிக்கப்பட்டு, அறிவிப்பாளர்களின் தரம் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் குறித்து முடிவு செய்யப்படும். அதிலும் தெளிவான முடிவு எட்டாத பட்சத்தில், விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் அப்படியே பதிவு செய்யப்படும்.

தரம் பிரிப்பதற்கு இதை விட சிறந்த ஆலோசனைகள் இருந்தால், எங்களுக்கு தெரிவிக்கவும். இது மட்டுமின்றி உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளத்தில் உள்ள Comment பகுதி அல்லது எங்களது மெயிலை தொடர்பு கொள்ளவும்.

பங்களிப்பு: இந்த பணி தொடர்ச்சியாக நடைபெற, உங்களின் பங்களிப்பு அவசியம். எனவே, இதில் பணிபுரியும் ஆலிம்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்பவர்கள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும். பங்களிக்க முடியாவிட்டாலும், இந்த பணி தொடர்ச்சியாக நடக்க, எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஆச் செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

 


Abdul Hakeem, Hafil, Alim.
Yasir Imdhadi,
Trichy Farook,

[email protected]
Contact: 9842470497
https://tamil.quranandhadis.com/

Tamilnadu, India.

M.G.Farook, Trichy.Email: [email protected]

My Facebook:  https://www.facebook.com/trichy.farook.56

இந்த (PHP Web-based Software) இணையதள சாஃப்ட்வேர், MG Farook ஆகிய என்னால் நிர்வகிக்கப்படுகிறது.