நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்களை ஒன்றுகூட்டுவான். அப்போது அவர்களுடைய உள்ளத்தில் (பரிந்துரைக்கும்படி யாரையாவது நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே” எனும்) எண்ணம் ஏற்படுத்தப்படும்.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பிலும் “நான்காம் முறை நான் “என் இறைவா, குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர – அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர- வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை” என்று கூறுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.
Book : 1
(முஸ்லிம்: 324)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«يَجْمَعُ اللهُ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْهَمُونَ لِذَلِكَ» بِمِثْلِ حَدِيثِهِمَا، وَذَكَرَ فِي الرَّابِعَةِ: ” فَأَقُولُ: يَا رَبِّ، مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ
Tamil-324
Shamila-193
JawamiulKalim-289
சமீப விமர்சனங்கள்