ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஓர் அலுவல் நிமித்தம் அனுப்பினார்கள். பிறகு அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். உடனே அவர்கள் (பதிலுக்கு) என்னை நோக்கி சைகை செய்தார்கள் (பதில் சலாம் சொல்லவில்லை). அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, “சற்று முன்னர் எனக்கு நீங்கள் சலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்தேன் (அதனால்தான் பதில் சலாம் சொல்லவில்லை)” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது (கிப்லாவை முன்னோக்கியிருக்கவில்லை).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 5
(முஸ்லிம்: 938)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ قَالَ
إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَنِي لِحَاجَةٍ، ثُمَّ أَدْرَكْتُهُ وَهُوَ يَسِيرُ – قَالَ قُتَيْبَةُ: يُصَلِّي – فَسَلَّمْتُ عَلَيْهِ، فَأَشَارَ إِلَيَّ، فَلَمَّا فَرَغَ دَعَانِي فَقَالَ: «إِنَّكَ سَلَّمْتَ آنِفًا وَأَنَا أُصَلِّي» وَهُوَ مُوَجِّهٌ حِينَئِذٍ قِبَلَ الْمَشْرِقِ
Tamil-938
Shamila-540
JawamiulKalim-844
சமீப விமர்சனங்கள்