தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1391

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

ரமளானில் இரவில் நின்று வணங்குமாறு வந்துள்ள ஆர்வமூட்டலும், அதுவே தராவீஹ் தொழுகை என்பதும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 6

(முஸ்லிம்: 1391)

25 – بَابُ التَّرْغِيبِ فِي قِيَامِ رَمَضَانَ، وَهُوَ التَّرَاوِيحُ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Tamil-1391
Shamila-759
JawamiulKalim-1272




2 comments on Muslim-1391

  1. அஸ்ஸலாமு அலைக்கும், கீழ்காணும் செய்தி தராவீஹ் 20 தொழ ஆதாரமாக உள்ளதாக சமூக தளங்களில் பரவி வருகிறது, இது சஹீஹான செய்தியா என்பதை விளக்கவும்.

    ” அண்மை காலத்தில் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் மாணவர் அத்வா அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருப்பதாக கூறி இனி தராவிஹ் 20 ரக்காத்தே என முடிவு செய்துள்ளனர்.

    இன்னும் உமர் ரலி ஆட்சியின் போது மஸ்ஜிதுன் நபவியில் 20 ரக்காத் தொழ வைத்ததையும் மேலதிக ஆதாரமாக வைத்து இனி முஜாஹித் பள்ளிகளில் 20 ரக்காத் தொழவைப்போம் என்று முடிவு செய்துள்ளனர்.”

    1. வ அலைக்கும் ஸலாம்.

      இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் மாணவர் அத்வா என்று கூறியுள்ளீர்கள். அதாஃ என்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த செய்தியின் நூலை அல்லது அரபு வாசகத்தைக் குறிப்பிடுங்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.