தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1482

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 46

“அல்முஅவ்விதத்தைன்” (குல் அஊது பி ரப்பில் ஃபலக், குல் அஊது பி ரப்பின்னாஸ் ஆகிய) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உமக்குத் தெரியாதா? இன்றிரவு (எனக்கு) சில வசனங்கள் அருளப்பெற்றுள்ளன. அவையொத்த வசனங்கள் முன்னெப்போதும் காணப்பட்டதில்லை. அவை: குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்” (113, 114ஆகிய) அத்தியாயங்களாகும்.

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 6

(முஸ்லிம்: 1482)

46 – بَابُ فَضْلِ قِرَاءَةِ الْمُعَوِّذَتَيْنِ

وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«أَلَمْ تَرَ آيَاتٍ أُنْزِلَتِ اللَّيْلَةَ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ»


Tamil-1482
Shamila-814
JawamiulKalim-1354




3 comments on Muslim-1482

  1. عن عقبة بن عامر قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوِّذات دبر كل صلاة. ولفظ الترمذي: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوِّذتين في دبر كل صلاة.
    [صحيح] – [رواه أبو داود والترمذي والنسائي]

    இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் “அல்-முஅவ்விதா” ஓதுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.

    அஸ்ஸலாமு அலைக்கும் இதன் தரம் சஹீஹ் என போட்டுள்ளது. விளக்கம் தேவை சகோ.

    1. வ அலைக்கும் ஸலாம்.

      நீங்கள் குறிப்பிடும் (அபூதாவூத்-1523, திர்மிதீ-2903, நஸாயீ-1336 ஆகியவற்றில் வரும்) செய்தியை விட , நஸாயீ-953, 5439 இல் வரும் செய்தியே மஹ்ஃபூல் என்று அறிஞர் அபூஅம்ர் யாஸிர் ஃபத்ஹீ விளக்கியுள்ளார். இந்தச் செய்திகளை இன்னும் நாம் பதிவு செய்யவில்லை. இதுபற்றி இன்ஷா அல்லாஹ் பிறகு சரிபார்த்து பதிவுசெய்கிறோம்.

      سنن النسائي (8/ 254)
      5439 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي عِمْرَانَ أَسْلَمَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِبٌ فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمِهِ، فَقُلْتُ: أَقْرِئْنِي سُورَةَ هُودٍ، أَقْرِئْنِي سُورَةَ يُوسُفَ فَقَالَ: «لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ»

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.