பாடம் : 55
மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கதாகும்.
முக்தார் பின் ஃபுல்ஃபுல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் அஸ்ருக்குப் பின் கூடுதலான தொழுகை தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் “அஸ்ருக்குப் பின் (கூடுதலான) தொழுகை தொழுததற்காக உமர் (ரலி) அவர்கள் காலத்தில் (தொழுபவரின்) கையில் அவர்கள் அடிப்பார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரியன் மறைந்த பின் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தோம்” என்று கூறினார்கள். நான் “அவ்விரு ரக்அத்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “நாங்கள் அவ்விரு ரக்அத்களையும் தொழுவதைப் பார்ப்பார்கள். எங்களைத் தொழச் சொல்லவுமில்லை; தொழ வேண்டாம் எனத் தடுக்கவுமில்லை” என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 6
(முஸ்லிம்: 1520)55 – بَابُ اسْتِحْبَابِ رَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ
وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ فُضَيْلٍ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُخْتَارِ بْنِ فُلْفُلٍ، قَالَ
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ التَّطَوُّعِ بَعْدَ الْعَصْرِ، فَقَالَ: «كَانَ عُمَرُ يَضْرِبُ الْأَيْدِي عَلَى صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ، وَكُنَّا نُصَلِّي عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ»، فَقُلْتُ لَهُ: أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّاهُمَا؟ قَالَ: «كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا فَلَمْ يَأْمُرْنَا، وَلَمْ يَنْهَنَا»
Tamil-1520
Shamila-836
JawamiulKalim-1388
சமீப விமர்சனங்கள்