பாடம் : 7
நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து, சலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்லப் போனார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரிகளின் சகோதரரே! என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?” என்று விசாரித்தார்கள். அதற்கு “நலமுடன் இருக்கிறார்” என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்?” என்று கேட்டு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ நீளங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது சஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த தோழர்களும் (சஅத் (ரலி) அவர்களை) நெருங்கினார்கள்.
Book : 11
(முஸ்லிம்: 1684)7 – بَابٌ فِي عِيَادَةِ الْمَرْضَى
وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ يَعْنِي ابْنَ غَزِيَّةَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ بْنِ الْمُعَلَّى، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ
كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَيْهِ، ثُمَّ أَدْبَرَ الْأَنْصَارِيُّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أَخَا الْأَنْصَارِ كَيْفَ أَخِي سَعْدُ بْنُ عُبَادَةَ؟، فَقَالَ: صَالِحٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَعُودُهُ مِنْكُمْ؟» فَقَامَ، وَقُمْنَا مَعَهُ، وَنَحْنُ بِضْعَةَ عَشَرَ، مَا عَلَيْنَا نِعَالٌ، وَلَا خِفَافٌ، وَلَا قَلَانِسُ، وَلَا قُمُصٌ، نَمْشِي فِي تِلْكَ السِّبَاخِ حَتَّى جِئْنَاهُ، فَاسْتَأْخَرَ قَوْمُهُ مِنْ حَوْلِهِ، حَتَّى دَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ الَّذِينَ مَعَهُ
Tamil-1684
Shamila-925
JawamiulKalim-1539
சமீப விமர்சனங்கள்