தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1908

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு சில மேலங்கிகள் வந்தன. என்னிடம் என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், “(என்னோடு வா!) நாம் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்” என்று கூறினார்கள். என் தந்தை (நபியவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள் “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்; உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்” என்று கூறினார்கள்.

Book : 12

(முஸ்லிம்: 1908)

حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ أَبُو صَالِحٍ، حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ

قَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةٌ فَقَالَ لِي أَبِي، مَخْرَمَةُ انْطَلِقْ بِنَا إِلَيْهِ عَسَى أَنْ يُعْطِيَنَا مِنْهَا شَيْئًا، قَالَ: فَقَامَ أَبِي عَلَى الْبَابِ فَتَكَلَّمَ، فَعَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَوْتَهُ فَخَرَجَ وَمَعَهُ قَبَاءٌ وَهُوَ يُرِيهِ مَحَاسِنَهُ، وَهُوَ يَقُولُ: «خَبَأْتُ هَذَا لَكَ خَبَأْتُ هَذَا لَكَ»


Tamil-1908
Shamila-1058
JawamiulKalim-1758




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.