தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1927

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில், “அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள். மொட்டை போடுவ(தை பக்தி மார்க்கமாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் அவர்களின் அடையாளமாகும். “அவர்கள் தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள்” அல்லது “படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர்”. இரண்டு பிரிவினர்களில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு அவர்களுக்கு உதாரணமாக ஒரு மனிதரைக் குறிப்பிட்டார்கள். “ஒருவர் வேட்டைப் பிராணியை நோக்கி அம்பை எய்துவிட்டு, அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (பிராணியின் உடலைத் துளைத்துவிட்டதற்கான) எந்த அடையாளத்தையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் அடிப்பாகக் குச்சியைப் பார்பபார். அதிலும் (பிராணியை வீழ்த்திவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் முனையில் நாணைப் பொருத்தப் பயன்படும் இடத்தைப் பார்ப்பார். அதிலும் (பிராணியைத் தாக்கி விட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார்” என்று கூறினார்கள்.

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இராக்வாசிகளே! நீங்கள்தாம் அவர்களைக் கொன்றொழித்தீர்கள்.

Book : 12

(முஸ்லிம்: 1927)

وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ قَوْمًا يَكُونُونَ فِي أُمَّتِهِ، يَخْرُجُونَ فِي فُرْقَةٍ مِنَ النَّاسِ، سِيمَاهُمْ التَّحَالُقُ قَالَ: «هُمْ شَرُّ الْخَلْقِ – أَوْ مِنْ أَشَرِّ الْخَلْقِ – يَقْتُلُهُمْ أَدْنَى الطَّائِفَتَيْنِ إِلَى الْحَقِّ» قَالَ: فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُمْ مَثَلًا، أَوْ قَالَ قَوْلًا «الرَّجُلُ يَرْمِي الرَّمِيَّةَ – أَوْ قَالَ الْغَرَضَ – فَيَنْظُرُ فِي النَّصْلِ فَلَا يَرَى بَصِيرَةً، وَيَنْظُرُ فِي النَّضِيِّ فَلَا يَرَى بَصِيرَةً، وَيَنْظُرُ فِي الْفُوقِ فَلَا يَرَى بَصِيرَةً» قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ: «وَأَنْتُمْ قَتَلْتُمُوهُمْ، يَا أَهْلَ الْعِرَاقِ»


Tamil-1927
Shamila-1064
JawamiulKalim-1773




2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூநள்ரா —> அபூஸயீத் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-1927192819291930 , அபூதாவூத்-4667 ,

  • அலீ பின் ஸைத் —> அபூநள்ரா —> அபூஸயீத் (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-18658 , 18659 , அஹ்மத்-11906 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7659 ,

  • ளஹ்ஹாக் —> அபூஸயீத் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-, புகாரி-6163 , முஸ்லிம்-19261931 ,

மேலும் பார்க்க: புகாரி-3609 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.