தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2034

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது::

ஒரு மனிதர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ர்) தொழுகையின் நேரம் என்னை வந்தடைந்தால், அப்போதும் நான் நோன்பு நோற்கவேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ர்) தொழுகைநேரம் என்னை வந்தடைகிறது. அப்போதும் நான் நோன்பைத் தொடரவே செய்கிறேன்” என்று விடையளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களைப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே?” என்று சொன்னார். அதற்கு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களைவிட அதிகமாக அறிந்தவனாகவும் இருக்கவே நான் ஆசிக்கிறேன்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 13

(முஸ்லிம்: 2034)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ ابْنُ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيُّ أَبُو طُوَالَةَ، أَنَّ أَبَا يُونُسَ، مَوْلَى عَائِشَةَ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا

أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِيهِ، وَهِيَ تَسْمَعُ مِنْ وَرَاءِ الْبَابِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ، أَفَأَصُومُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ فَأَصُومُ» فَقَالَ: لَسْتَ مِثْلَنَا، يَا رَسُولَ اللهِ، قَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَقَالَ: «وَاللهِ، إِنِّي لَأَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ، وَأَعْلَمَكُمْ بِمَا أَتَّقِي»


Tamil-2034
Shamila-1110
JawamiulKalim-1875




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.