இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் “இஹ்ராம்” கட்டியவராக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டார். அவரது ஒட்டகம் (அந்த இடத்திலேயே) அவரைக் கொன்றுவிட்டது. (அதனால் அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவருக்கு நீராட்டி, இரு ஆடையால் பிரேத ஆடை (கஃபன்) அணிவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்கள். எந்த நறுமணமும் பூசக் கூடாது; அவரது தலை வெளியில் தெரிய வேண்டும் (என்றும் உத்தரவிட்டார்கள்).
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் இந்த ஹதீஸை அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அப்போது “அவரது தலையும் முகமும் வெளியில் தெரிய வேண்டும். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் (“இஹ்ராம்” கட்டியவராக) எழுப்பப்படுவார்” என்று அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 15
(முஸ்லிம்: 2288)وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافعٍ، قَالَ ابْنُ نَافِعٍ: أَخْبَرَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا بِشْرٍ، يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يُحَدِّثُ
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ، فَوَقَعَ مِنْ نَاقَتِهِ فَأَقْعَصَتْهُ: «فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُغْسَلَ بِمَاءٍ وَسِدْرٍ، وَأَنْ يُكَفَّنَ فِي ثَوْبَيْنِ، وَلَا يُمَسَّ طِيبًا، خَارِجٌ رَأْسُهُ» قَالَ شُعْبَةُ: ثُمَّ حَدَّثَنِي بِهِ بَعْدَ ذَلِكَ: خَارِجٌ رَأْسُهُ وَوَجْهُهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّدًا
Tamil-2288
Shamila-1206
JawamiulKalim-2105
சமீப விமர்சனங்கள்