நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், “விடைபெறும்” ஹஜ் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் உம்ராச் செய்வதற்காக “இஹ்ராம்” கட்டியவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக (“தமத்துஉ”) “இஹ்ராம்” கட்டியவர், (உம்ராவை முடித்துவிட்டு) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். உம்ராவிற்காக (“கிரான்”) “இஹ்ராம்” கட்டி, தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருப்பவர் (துல்ஹஜ் பத்தாம் நாளில்) தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம். ஹஜ்ஜுக்காக மட்டும் (“இஃப்ராத்”) “இஹ்ராம்” கட்டியிருப்பவர் தமது ஹஜ்ஜை முழுமையாக்கட்டும்” என்று கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் வரும்வரை மாதவிடாயுடனேயே நான் இருந்தேன். நானோ உம்ராவிற்காக மட்டுமே “இஹ்ராம்” கட்டியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிடுமாறும், உம்ராவிற்காக நான் “இஹ்ராம்” கட்டியதை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டிக்கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். நான் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அனுப்பி, எந்த உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலேயே நான் ஹஜ்ஜை அடைந்து கொண்டேனோ அந்த உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Book : 15
(முஸ்லிம்: 2299)وحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ
خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، حَتَّى قَدِمْنَا مَكَّةَ، فَقَالَ رَسُولُ اللهِ: صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ، وَلَمْ يُهْدِ فَلْيَحْلِلْ، وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ، وَأَهْدَى، فَلَا يَحِلُّ حَتَّى يَنْحَرَ هَدْيَهُ، وَمَنْ أَهَلَّ بِحَجٍّ، فَلْيُتِمَّ حَجَّهُ» قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: فَحِضْتُ، فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ، وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ، فَأَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْقُضَ رَأْسِي، وَأَمْتَشِطَ، وَأُهِلَّ بِحَجٍّ، وَأَتْرُكَ الْعُمْرَةَ، قَالَتْ: فَفَعَلْتُ ذَلِكَ، حَتَّى إِذَا قَضَيْتُ حَجَّتِي، بَعَثَ مَعِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مِنَ التَّنْعِيمِ، مَكَانَ عُمْرَتِي، الَّتِي أَدْرَكَنِي الْحَجُّ وَلَمْ أَحْلِلْ مِنْهَا
Tamil-2299
Shamila-1211
JawamiulKalim-2116
சமீப விமர்சனங்கள்