தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2304

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) “இஹ்ராம்” கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) “இஹ்ராம்” கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) “இஹ்ராம்” கட்டியிருந்தனர். நான் உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்” என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த அறிவிப்பில், “ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றித்தந்தான்”என அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் “இதற்கு(ப் பரிகாரமாக)ப் பலியிடலோ, தர்மமோ, நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை” என ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2304)

وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ مِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ، فَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِهِمَا، وقَالَ فِيهِ: قَالَ عُرْوَةُ فِي ذَلِكَ: إِنَّهُ قَضَى اللهُ حَجَّهَا وَعُمْرَتَهَا، قَالَ هِشَامٌ: وَلَمْ يَكُنْ فِي ذَلِكَ هَدْيٌ وَلَا صِيَامٌ وَلَا صَدَقَةٌ


Tamil-2304
Shamila-1211
JawamiulKalim-2119




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.