தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2374

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28

ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவர், மக்காவிற்கு வந்ததும் தவாஃபும் சயீயும் செய்வது அவசியம்.

 வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரியா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (சரிதான்)” என்றார்கள். அதற்கு அந்த மனிதர், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நீ அரஃபா செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே!” எனக் கூறுகின்றாரே?” என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் “அரஃபா” செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (ஒரு முஸ்லிம்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லா?” என்று கேட்டார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2374)

28 – بَابُ مَا يَلْزَمُ مَنْ أَحْرَمَ بِالْحَجِّ، ثُمَّ قَدِمَ مَكَّةَ مِنَ الطَّوَافِ وَالسَّعْيِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ وَبَرَةَ، قَالَ

كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: أَيَصْلُحُ لِي أَنْ أَطُوفَ بِالْبَيْتِ قَبْلَ أَنْ آتِيَ الْمَوْقِفَ، فَقَالَ: نَعَمْ، فَقَالَ: فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: لَا تَطُفْ بِالْبَيْتِ حَتَّى تَأْتِيَ الْمَوْقِفَ، فَقَالَ ابْنُ عُمَرَ: «فَقَدْ حَجَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ قَبْلَ أَنْ يَأْتِيَ الْمَوْقِفَ» فَبِقَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ تَأْخُذَ، أَوْ بِقَوْلِ ابْنِ عَبَّاسٍ إِنْ كُنْتَ صَادِقًا


Tamil-2374
Shamila-1233
JawamiulKalim-2178




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.