தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2556

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸியாத் (ஸியாத் பின் அபீசுஃப் யான்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவிற்கு) பலிப்பிராணியை அனுப்பி வைக்கின்றவருக்கும் அப்பிராணி அறுக்கப்படும்வரை,ஹாஜிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ள அனைத்தும் தடை செய்யப்படும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்களே? நானும் எனது பலிப்பிராணியை (மக்காவிற்கு) அனுப்பியுள்ளேன். எனவே, உங்களது தீர்ப்பை எனக்கு எழுதுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றல்ல. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் அடையாள மாலைகளை, என் கைகளாலேயே திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் அந்த மாலையைப் பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு (அந்தப்) பிராணியை என் தந்தை (அபூபக்ர்-ரலி) உடன் அனுப்பிவைத்தார்கள். (மக்காவில்) பலிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்திருந்த எதுவும் தடை செய்யப்படவில்லை” என்று (பதில் கடிதத்தில்) குறிப்பிட்டார்கள்.

Book : 15

(முஸ்லிம்: 2556)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ

أَنَّ ابْنَ زِيَادٍ كَتَبَ إِلَى عَائِشَةَ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، قَالَ: مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ، حَتَّى يُنْحَرَ الْهَدْيُ، وَقَدْ بَعَثْتُ بِهَدْيِي، فَاكْتُبِي إِلَيَّ بِأَمْرِكِ، قَالَتْ عَمْرَةُ: قَالَتْ عَائِشَةُ لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ: «أَنَا فَتَلْتُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ أَحَلَّهُ اللهُ لَهُ، حَتَّى نُحِرَ الْهَدْيُ»


Tamil-2556
Shamila-1321
JawamiulKalim-2348




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.