தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2760

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (விற்பனைச்சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும், அல்லது வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது (இடைமறித்துத்) தமக்காகப் பெண் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது (தலையிட்டு) விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்திலுள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி) விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தம் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்கவேண்டாம் என்றும் (இவையனைத்திற்கும்) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், அம்ருந் நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “தம் சகோதர (இஸ்லாமிய)ன் விலை பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட (அதிக விலை தருவதாகக் கூறி) விலை பேச வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 16

(முஸ்லிம்: 2760)

وحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، أَوْ يَتَنَاجَشُوا، أَوْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، أَوْ يَبِيعَ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا، أَوْ مَا فِي صَحْفَتِهَا»، زَادَ عَمْرٌو فِي رِوَايَتِهِ: «وَلَا يَسُمِ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ»


Tamil-2760
Shamila-1413
JawamiulKalim-2540




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.