தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2778

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல்.

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அதாவது நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு (என் தலை முடி உதிர்ந்து)விட்டது. பின்னர் என் தலைமுடி பிடரிவரை வளர்ந்தது. நான் என் தோழியர் சிலருடன் ஏற்றப் பலகையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, (என் தாயார்) உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் என்னை எதற்காக அழைத்தார் என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டுவந்து, கதவுக்கருகில் என்னை நிறுத்தினார். (அவர் வேகமாக இழுத்துவந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது.) ஆஹ்… ஆஹ்… என்றேன். பின்னர் மூச்சிறைப்பு நின்றதும் என்னை (எனது) அறைக்குள் அனுப்பினார். அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள், “நன்மையுடனும் வளத்துடனும் வருக! (இறைவனின்) நற்பேறு உண்டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். என் தாயார் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் எனது தலையைக் கழுவி என்னை அலங்கரித்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் திடீரென என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16

(முஸ்லிம்: 2778)

10 – بَابُ تَزْوِيجِ الْأَبِ الْبِكْرَ الصَّغِيرَةَ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: وَجَدْتُ فِي كِتَابِي عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

«تَزَوَّجَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِسِتِّ سِنِينَ، وَبَنَى بِي وَأَنَا بِنْتُ تِسْعِ سِنِينَ»، قَالَتْ: ” فَقَدِمْنَا الْمَدِينَةَ، فَوُعِكْتُ شَهْرًا، فَوَفَى شَعْرِي جُمَيْمَةً، فَأَتَتْنِي أُمُّ رُومَانَ، وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ، وَمَعِي صَوَاحِبِي، فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا، وَمَا أَدْرِي مَا تُرِيدُ بِي فَأَخَذَتْ بِيَدِي، فَأَوْقَفَتْنِي عَلَى الْبَابِ، فَقُلْتُ: هَهْ هَهْ، حَتَّى ذَهَبَ نَفَسِي، فَأَدْخَلَتْنِي بَيْتًا، فَإِذَا نِسْوَةٌ مِنَ الْأَنْصَارِ، فَقُلْنَ: عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ، فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ، فَغَسَلْنَ رَأْسِي وَأَصْلَحْنَنِي، فَلَمْ يَرُعْنِي إِلَّا وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضُحًى، فَأَسْلَمْنَنِي إِلَيْهِ


Tamil-2778
Shamila-1422
JawamiulKalim-2555




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.