தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2834

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

புணர்ச்சி இடைமுறிப்பின் (“அஸ்ல்”) சட்டம்.

 அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அபூஸிர்மா (ரஹ்) அவர்களும் (பள்ளிவாசலில் அமர்ந்திருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஸிர்மா அவர்கள், “அபூசயீத் அவர்களே! “அஸ்ல்” பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், “ஆம்” என்று கூறிவிட்டு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனூ முஸ்தலிக் (“முரைசீஉ”) போரில் கலந்து கொண்டோம். அப்போது,உயர்ந்த அரபு இனப் பெண்களைப் போர்க்கைதிகளாகப் பிடித்தோம். நீண்ட காலம் நாங்கள் திருமணம் செய்துகொள்ளாதவர்களாக (இருந்ததால், தாம்பத்திய உறவில் நாட்டம் கொண்டவர்களாக) இருந்தோம். அதே நேரத்தில், (போர்க் கைதிகளை விடுதலை செய்து) நஷ்டஈடு பெறுவதற்கு ஆசையும்பட்டோம், ஆகவே, (போர்க் கைதிகளான பெண்களிடம்) தாம்பத்திய சுகம் அடையவும், (அதே சமயம் அவர்கள் கருவுற்றுவிடக் கூடாது என்பதற்காக) “அஸ்ல்” செய்து கொள்ளவும் விரும்பினோம்.

இந்நிலையில் “நம்மிடையே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்காமல் நாம் “அஸ்ல்”செய்வதா?” என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள் மீது (குற்றம்) இல்லை. படைக்க வேண்டுமென அல்லாஹ் எழுதிவிட்ட எந்த ஓர் உயிரும் மறுமை நாள்வரை உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 16

(முஸ்லிம்: 2834)

22 – بَابُ حُكْمِ الْعَزْلِ

وحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي رَبِيعَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، أَنَّهُ قَالَ

دَخَلْتُ أَنَا وَأَبُو صِرْمَةَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، فَسَأَلَهُ أَبُو صِرْمَةَ، فَقَالَ: يَا أَبَا سَعِيدٍ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَذْكُرُ الْعَزْلَ؟ فَقَالَ: نَعَمْ، غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ بَلْمُصْطَلِقِ، فَسَبَيْنَا كَرَائِمَ الْعَرَبِ، فَطَالَتْ عَلَيْنَا الْعُزْبَةُ، وَرَغِبْنَا فِي الْفِدَاءِ، فَأَرَدْنَا أَنْ نَسْتَمْتِعَ وَنَعْزِلَ، فَقُلْنَا: نَفْعَلُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا لَا نَسْأَلُهُ، فَسَأَلْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ «لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا، مَا كَتَبَ اللهُ خَلْقَ نَسَمَةٍ هِيَ كَائِنَةٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، إِلَّا سَتَكُونُ»


Tamil-2834
Shamila-1438
JawamiulKalim-2607




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.