ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் பால்குடித் தந்தையின் சகோதரர்) அஃப்லஹ் பின் குஐஸ் (ரலி) அவர்கள் என்னிடம் எனது வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அவர் (ஒருவரை என்னிடம்) அனுப்பி, “என் சகோதரரின் மனைவி உங்களுக்குப் பாலூட்டியிருக்கிறார்; நான் உங்களுக்குப் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவேன் (எனவே நீங்கள் எனக்கு அனுமதியளியுங்கள்)” என்று கூறினார். அப்போதும் அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் இதைத் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அவர் உன் வீட்டிற்குள் வரட்டும்; ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்” என்று கூறினார்கள்.
Book : 17
(முஸ்லிம்: 2862)وحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ بْنُ قُعَيْسٍ، فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ، فَأَرْسَلَ: إِنِّي عَمُّكِ، أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي، فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لِيَدْخُلْ عَلَيْكِ فَإِنَّهُ عَمُّكِ»
Tamil-2862
Shamila-1445
JawamiulKalim-2630
சமீப விமர்சனங்கள்