பாடம் : 7
பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது தொடர்பான சட்டம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கிறேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் – மகன் உறவு ஏற்பட்டு விடும்)” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், “அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, “அவர் பருவவயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
Book : 17
(முஸ்லிம்: 2878)7 – بَابُ رِضَاعَةِ الْكَبِيرِ
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ وَهُوَ حَلِيفُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ»، قَالَتْ: وَكَيْفَ أُرْضِعُهُ؟ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ، فَتَبَسَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ»، زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ: وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا، وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ: فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Tamil-2878
Shamila-1453
JawamiulKalim-2644
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-24108 , 25415 , 25649 , 25650 , 25913 , 26115 , 26179 , 26315 , 26330 , தாரிமீ-2303 , முஸ்லிம்-2878 , 2879 , 2880 , 2881 , 2882 , இப்னு மாஜா-1943 , அபூதாவூத்-2061 , நஸாயீ-3322 , 3323 , 3324 ,
2 . மாலிக்-1775 ,
3 . முஸ்லிம்-2883 ,
more hadees…
கூடுதல் தகவல்: அந்நியப் பெண் இளைஞருக்கு பாலூட்டலாமா? .
சமீப விமர்சனங்கள்