தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2893

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

(புதிதாக மணந்துகொண்ட) கன்னிப் பெண்ணுக்கும் கன்னி கழிந்த பெண்ணுக்கும், திருமணத்திற்குப் பின் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்களின் அளவு.

 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டபோது, என்னுடன் மூன்று நாட்கள் தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “(புதுமணப் பெண்ணான உன்னுடன் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதால்) உனக்கு உன் கணவரால் எந்த அவமரியாதையும் கிடையாது. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குகிறேன். ஆனால், உன்னிடம் ஏழு நாட்கள் தங்கினால், என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாட்கள் தங்குவேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 17

(முஸ்லிம்: 2893)

12 – بَابُ قَدْرِ مَا تَسْتَحِقُّهُ الْبِكْرُ، وَالثَّيِّبُ مِنْ إِقَامَةِ الزَّوْجِ عِنْدَهَا عُقْبَ الزِّفَافِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ، قَالُوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلَمَةَ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ، أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا، وَقَالَ: «إِنَّهُ لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ، إِنْ شِئْتِ سَبَّعْتُ لَكِ، وَإِنْ سَبَّعْتُ لَكِ، سَبَّعْتُ لِنِسَائِي»


Tamil-2893
Shamila-1460
JawamiulKalim-2658




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.