தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2955

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அள்ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அல்மக்ஸூமீ என்னை மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார்; பின்னர் யமன் நாட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது என் கணவரின் குடும்பத்தார் என்னிடம், “உனக்கு ஜீவனாம்சம் எதையும் நாங்கள் தர வேண்டியதில்லை” என்று கூறினர். அப்போது (என் கணவருடைய தந்தையின் சகோதரர் புதல்வர்) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) “அபூஹஃப்ஸ் தம் துணைவியை (ஃபாத்திமா பின்த் கைஸை) மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார். (“இத்தா”விலிருக்கும்) அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?” என்று கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது; ஆனால் “இத்தா” உண்டு”என்றார்கள். மேலும், எனக்கு ஆளனுப்பி, “உன் விஷயத்தில் என் உத்தரவுக்கு முன் நீயாக முந்தி(க்கொண்டு முடிவெடுத்து)விடாதே” என்று கூறியனுப்பினார்கள். மேலும், என்னை (என் கணவரின் இல்லத்திலிருந்து) இடம்மாறி உம்மு ஷரீக் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு (அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் விதமாக) “உம்மு ஷரீக்கின் வீட்டிற்கு ஆரம்பக் காலத்து முஹாஜிர்கள் (விருந்தாளிகளாக) வருவார்கள். எனவே, நீ கண் பார்வையற்ற (உன் தந்தையின் சகோதரர் புதல்வரான) இப்னு உம்மி மக்தூம் அவர்களின் வீட்டிற்குச் செல்! ஏனெனில், நீ உன் துப்பட்டாவைக் கழற்றினாலும் அவர் உன்னைப் பார்க்க முடியாது” என்று கூறியனுப்பினார்கள். ஆகவே, நான் இப்னு உம்மி மக்தூமிடம் சென்றேன். எனது “இத்தா”க் காலம் முடிந்ததும் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.

Book : 18

(முஸ்லிம்: 2955)

وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، أَخْبَرَتْهُ

أَنَّ أَبَا حَفْصِ بْنَ الْمُغِيرَةِ الْمَخْزُومِيَّ، طَلَّقَهَا ثَلَاثًا، ثُمَّ انْطَلَقَ إِلَى الْيَمَنِ، فَقَالَ لَهَا أَهْلُهُ: لَيْسَ لَكِ عَلَيْنَا نَفَقَةٌ، فَانْطَلَقَ خَالِدُ بْنُ الْوَلِيدِ فِي نَفَرٍ، فَأَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ مَيْمُونَةَ، فَقَالُوا: إِنَّ أَبَا حَفْصٍ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا، فَهَلْ لَهَا مِنْ نَفَقَةٍ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَتْ لَهَا نَفَقَةٌ، وَعَلَيْهَا الْعِدَّةُ»، وَأَرْسَلَ إِلَيْهَا أَنْ لَا تَسْبِقِينِي بِنَفْسِكِ، وَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى أُمِّ شَرِيكٍ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهَا: «أَنَّ أُمَّ شَرِيكٍ يَأْتِيهَا الْمُهَاجِرُونَ الْأَوَّلُونَ، فَانْطَلِقِي إِلَى ابْنِ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى، فَإِنَّكِ إِذَا وَضَعْتِ خِمَارَكِ لَمْ يَرَكِ»، فَانْطَلَقَتْ إِلَيْهِ، فَلَمَّا مَضَتْ عِدَّتُهَا أَنْكَحَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ


Tamil-2955
Shamila-1480
JawamiulKalim-2720




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.