தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2960

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். எங்களுக்கு அவர்கள் (மதீனாவின்) “ருதப் இப்னு தாப்” (எனும் வகை) பேரீச்சம் பழத்தை விருந்தாகக் கொடுத்தார்கள். ஒரு வகை தானிய மாவுக் கஞ்சியை எங்களுக்கு அருந்தக் கொடுத்தார்கள். அவர்களிடம் நான் “மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் எங்கு “இத்தா” இருப்பாள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், என் குடும்பத்தாரிடமே நான் “இத்தா” இருக்க எனக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள்.

Book : 18

(முஸ்லிம்: 2960)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ الْهُجَيْمِيُّ، حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ، حَدَّثَنَا الشَّعْبِيُّ، قَالَ

دَخَلْنَا عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، فَأَتْحَفَتْنَا بِرُطَبِ ابْنِ طَابٍ، وَسَقَتْنَا سَوِيقَ سُلْتٍ، فَسَأَلْتُهَا عَنِ الْمُطَلَّقَةِ ثَلَاثًا، أَيْنَ تَعْتَدُّ؟ قَالَتْ: «طَلَّقَنِي بَعْلِي ثَلَاثًا، فَأَذِنَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَعْتَدَّ فِي أَهْلِي»


Tamil-2960
Shamila-11480
JawamiulKalim-2724




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.