தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3351

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் நோயுற்றிருந்தபோது) என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான், “என் செல்வங்கள் அனைத்திலும் இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள். நான், “அவ்வாறாயின் (என் செல்வத்தில்) பாதியில் (இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் ஒரு பாகத்திலாவது (இறுதி விருப்பம்) தெரிவிக்கட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்; மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான்” என்றார்கள்.

Book : 25

(முஸ்லிம்: 3351)

وحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ

عَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أُوصِي بِمَالِي كُلِّهِ؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَالنِّصْفُ؟ قَالَ: «لَا»، فَقُلْتُ: أَبِالثُّلُثِ؟ فَقَالَ: «نَعَمْ، وَالثُّلُثُ كَثِيرٌ»


Tamil-3351
Shamila-1628
JawamiulKalim-3086




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.