தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3412

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடைய அடிமைப் பெண்ணின் முகத்தில் ஒருவர் அறைந்துவிட்டார். அப்போது அவரிடம் நான், “முகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டேன். பிறகு “நான் ஏழு சகோதரர்களில் ஒருவனாயிருந்தேன். எங்களிடம் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருந்தார். எங்களில் ஒருவர் அவரை அவரது முகத்தில் அறைந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை விடுதலை செய்துவிடுமாறு உத்தர விட்டார்கள்” என்று நான் கூறினேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என்னிடம் முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். “ஷுஅபா” என்றேன். பின்னர் அபூஷுஅபா அல்இராக்கீ (ரஹ்) அவர்கள் தமக்கு இந்த ஹதீஸை அறிவித்ததாகக் கூறி, இதைத் தெரிவித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 27

(முஸ்லிம்: 3412)

وحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: قَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ: مَا اسْمُكَ؟ قُلْتُ شُعْبَةُ: فَقَالَ: مُحَمَّدٌ: حَدَّثَنِي أَبُو شُعْبَةَ الْعِرَاقِيُّ، عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ

أَنَّ جَارِيَةً لَهُ لَطَمَهَا إِنْسَانٌ، فَقَالَ لَهُ سُوَيْدٌ: أَمَا عَلِمْتَ أَنَّ الصُّورَةَ مُحَرَّمَةٌ، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَسَابِعُ إِخْوَةٍ لِي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا لَنَا خَادِمٌ غَيْرُ وَاحِدٍ، فَعَمَدَ أَحَدُنَا فَلَطَمَهُ، فَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُعْتِقَهُ»

– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ وَهْبِ بْنِ جَرِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: قَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ: مَا اسْمُكَ؟ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ عَبْدِ الصَّمَدِ


Tamil-3412
Shamila-1658
JawamiulKalim-3142




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.