தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3498

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், அன்று மாலை நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப் பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? நாம் அறப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால் மக்களில் சிலர் நம்முடன் வந்து சேராமல் (இங்கேயே) தங்கி விடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிடுகிறார்கள் என்று கூறினார்கள்” எனக் காணப்படுகிறது. அதில் “நம்முடைய குடும்பத்தாரிடையே”எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், தாவூத் பின் அபீஹிந்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதியே இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மாஇஸ் (ரலி) அவர்கள் தாம் விபச்சாரம் செய்ததை மூன்று முறை ஒப்புக்கொண்டார்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 29

(முஸ்லிம்: 3498)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا دَاوُدُ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ مَعْنَاهُ، وَقَالَ فِي الْحَدِيثِ

فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْعَشِيِّ، فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” أَمَّا بَعْدُ: فَمَا بَالُ أَقْوَامٍ إِذَا غَزَوْنَا يَتَخَلَّفُ أَحَدُهُمْ عَنَّا لَهُ نَبِيبٌ كَنَبِيبِ التَّيْسِ “، وَلَمْ يَقُلْ: «فِي عِيَالِنَا»

– وحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا سُفْيَانُ، كِلَاهُمَا عَنْ دَاوُدَ، بِهَذَا الْإِسْنَادِ بَعْضَ هَذَا الْحَدِيثِ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ: فَاعْتَرَفَ بِالزِّنَى ثَلَاثَ مَرَّاتٍ


Tamil-3498
Shamila-1694
JawamiulKalim-3212




5 comments on Muslim-3498

  1. அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்த உயிர் தியாகியாக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது கடனை விட்டுச் சென்றால் அல்லாஹ் அந்தப் பாவத்தை மன்னிக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள்.
    “அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு, கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
    நூல்: முஸ்லிம் (3498)

    இந்த ஹதீஸ் உங்களுடைய பக்கத்தில் பயான் குறிப்பில் இடம்பெற்றுள்ளது அதில் ஹதீஸ் எண் வேறுபடுகிறது

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      நீங்கள் கேட்ட ஹதீஸ்

      முஸ்லிம்-3832 (3498) ஆகும்.

      முதல் எண் நமது வெப்சைட்டின் எண்ணாகும். முஸ்லிம் தமிழாக்கம் எண்ணும் இதுவே.
      இரண்டாவது எண் ஆலமிய்யா எனும் பழைய குதுபுத் திஸ்ஆ எண்ணாகும். பயான் சைட்டில் முதல் எண் சேர்க்கப்பட்டுவிட்டது. ஜஸாகல்லாஹு கைரா.

      1. தெளிவுபடுத்தியமைக்கு ஜஸாக்கல்லா ஹைட்ரா. உங்கள் தளத்திலுள்ள ஹதிஸ்களையே பார்த்து வருகிறேன்.நம்பகத்தன்மை என்பதால்.

        1. அல்ஹம்துலில்லாஹ். மென்மேலும் பணிகள் தொடர துஆச் செய்யவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.