தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3656

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குறைஷியர் தம்முடன் சுஹைல் பின் அம்ர் இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் “(ஒப்பந்தப் பத்திரத்தில் முதலில்) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…) என எழுதுவீராக!” என்று கூறினார்கள்.

அப்போது சுஹைல், “பிஸ்மில்லாஹ்” (அல்லாஹ்வின் பெயரால்) என்பது சரி (அதை நாங்கள் அறிவோம்); அது என்ன பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்? அதை நாங்கள் அறியவில்லையே? எனவே, நாங்கள் அறிந்துள்ள “பிஸ்மிக்கல்லாஹும்ம” (அல்லாஹ்வே! உன் பெயரால்) எனும் வாசகத்தை எழுதுங்கள்” என்று கூறினார். (அவ்வாறே எழுதும்படி உத்தரவிட்டார்கள்.) பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து… என எழுதுவீராக!” என்று (அலீயிடம்) கூறினார்கள்.

அப்போது குறைஷியர், “நீர் இறைவனின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின் நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போம். மாறாக, உமது பெயரையும் உம் தந்தையின் பெயரையும் (ஒப்பந்தத்தில்) எழுதுக” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம்) “அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதிடமிருந்து என எழுதுவீராக” என்று கூறினார்கள்.

அப்போது குறைஷியர் பின்வருமாறு நபிகளாரிடம் நிபந்தனையிட்டனர்: உங்களிடமிருந்து யாரேனும் (எங்களிடம்) வந்துவிட்டால் அவரை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம். எங்களிடமிருந்து யாரேனும் (உங்களிடம்) வந்துவிட்டால் அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்ப வேண்டும்.

முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் தூதரே! (பாதகமான நிபந்தனைகள் கொண்ட) இதை நாம் எழுத வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று கூறிவிட்டு, “யாரேனும் நம்மிடம் வந்துவிட்டு (மதமாறிச்) சென்றால் அவரை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்தி விடுவான். அவர்களிடமிருந்து யாரேனும் நம்மிடம் வந்தால் (அவர் திருப்பியனுப்பப் பெற்றாலும்) அவருக்கு மகிழ்வையும் (நெருக்கடியிலிருந்து) விடுபடுவதற்கான வழியையும் நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துவான்” என்றார்கள்.

Book : 32

(முஸ்லிம்: 3656)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ

أَنَّ قُرَيْشًا صَالَحُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «اكْتُبْ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، قَالَ سُهَيْلٌ: أَمَّا بِاسْمِ اللهِ، فَمَا نَدْرِي مَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَلَكِنِ اكْتُبْ مَا نَعْرِفُ بِاسْمِكَ اللهُمَّ، فَقَالَ: «اكْتُبْ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ»، قَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللهِ لَاتَّبَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبِ اسْمَكَ وَاسْمَ أَبِيكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ»، فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ، وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، أَنَكْتُبُ هَذَا؟ قَالَ: «نَعَمْ، إِنَّهُ مَنْ ذَهَبَ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللهُ، وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللهُ لَهُ فَرَجًا وَمَخْرَجًا»


Tamil-3656
Shamila-1784
JawamiulKalim-3343




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.